கிழக்கு மாகாண ஆளுநர் உத்தியோகபூர்வமாக பதவியேற்பு

(UDHAYAM, COLOMBO) – கிழக்கு மாகாண புதிய ஆளுநராக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட முன்னாள் வெளிநாட்டு அமைச்சரும் சட்டத்தரணியுமான ரோஹித போகல்லாகம தமது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார். திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று தனது கடமைகளை பொறுப்பேற்ற அவர், ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு கிழக்கு மாகாண ஆளுநராக தம்மை தெரிவு செய்தமைக்கு நன்றி தெரிவித்தார். ஜனாதிபதியினுடைய நோக்கங்களான அர்த்தமுள்ள நல்லிணக்கம், வளமான நாட்டை கட்டியெழுப்புதல் ஆகிய விடயங்களை கருத்திற்கொண்டு கிழக்கு மாகாணத்தை கட்டியெழுப்ப அனைவருடைய…

Read More