வாள்களுடன் பயணித்த இரு இளைஞர்கள் கைது

(UTV|JAFFNA)-சாவகச்சேரி – மட்டுவில் – சிவன்கோவில் வீதியில், வாள்களுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சாவகச்சேரி பொலிஸ் நிலைய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட விஷேட சுற்றிவளைப்புக்களின் போதே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், சந்தேகநபர்கள் அனுமதிப்பத்திரம் இன்றியே மோட்டார் சைக்கிளில் பயணித்ததாகவும், ஏதேனும் குற்றச் செயலைப் புரிவதற்காகவே அவர்கள் சென்றிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர். இவர்கள் சாவகச்சேரியைச் சேர்ந்த 21மற்றும் 22 வயதான இருவராகும். சந்தேகநபர்களை இன்று…

Read More

ரயில் குறுக்கு வீதியில் பயணித்த 8 பேருக்கு அபராதம்

(UDHAYAM, COLOMBO) – கனேமுல்ல – புளுகஹகொட ரயில் குறுக்கு வீதிக்கு ஊடாக, சமிக்ஞையை பொருட்படுத்தாது பயணித்த சிலருக்கு, கம்பஹா மேலதிக நீதவான் லலித் கன்னங்கர, இன்று அபராதம் விதித்தார். உந்துருளி செலுத்திய 8 பேருக்கு இதன்போது, 12,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. கனேமுல்ல, ஜா-எல மற்றும் கிரிந்திவெல ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களுக்கே அபராதம் விதிக்கப்பட்டது.

Read More