வாகனங்களை பரிசோதனை செய்ய புதிய விதிமுறை?

(UTV|COLOMBO)-வாகனங்களை பரிசோதனைக்குட்படுத்தும் காவல் துறையினரின் நடவடிக்கைகளுக்கு புதிய விதி முறை ஒன்றை அறிமுகப்படுத்த வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய போதே அவர் இதனை கேட்டுக்கொண்டுள்ளார். வாகனங்களை சோதனைக்குட்படுத்த மற்றும் சாரதி அனுமதி பத்திரங்களை பரிசீலிக்க காவல் துறையினர் மறைந்திருந்து வீதியின் நடுப்பகுதிக்கு ஓடி வருகின்றனர். வாகன செலுத்தனர்களின் முகத்திற்கு மின்கல ஒளி சமிக்ஞையை காட்டுதல், நடு வீதிக்கு வருகை தந்து முதலாவது ஒழுங்கையில் செல்லும்…

Read More

வடகொரியா மீண்டும் ஏவுகணை பரிசோதனை

(UDHAYAM, COLOMBO) – வடகொரியா இன்று குறைந்த தூர போல்ஸ்டிக் ரக ஏவுகணையை பரிசோதனை செய்துள்ளது. கடந்த மூன்று வாரங்களில் மேற்கொள்ளப்பட்ட மூன்றாவது வெற்றிக்கரமான ஏவுகணை பரிசோதனை இதுவென்று தெரிவிக்கப்பட்டுள்ளது இது ஜப்பானின் நிலப்பரப்பு திசையை நோக்கி ஏவப்பட்டதாக ஜப்பானிய தகவல்கள் தெரிவித்துள்ளன இந்தநிலையில் குறித்த ஏவுகணை பரிசோதனை, வடகொரியாவின் ஏவுகணை வலிமையை காட்டும் வகையில் அமைந்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஐக்கிய நாடுகளின் உடன்படிக்கைகளை தொடர்ந்தும் மீறி வடகொரியா இந்த ஏவுகணை பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறது.

Read More