கட்டார் ரியால் பரிமாற்றம் தொடர்பில் மத்திய வங்கி விஷேட அறிவித்தல்
(UDHAYAM, COLOMBO) – கட்டார் ரியாலை ஏற்கவேண்டாம் என எந்தவொரு வங்கிக்கும் அறிவிக்கவில்லை இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதேவேளை, கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள வங்கிகள், கட்டார் ரியால் பரிமாற்றத்தை மீண்டும் ஆரம்பித்துள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். எனினும் குறிப்பிட்டளவு பணமே இவ்வாறு பரிமாற்ற வாய்ப்பாளிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் மேலும் தெரிவித்துள்ளார். இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள வங்கிகள், கட்டார் ரியாலை ஏற்க மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.