மின்சாரம் தாக்கி ஒருவர் பலி
(UTV|KALUTARA)-புலத்சிங்கள, ஹேனதென்ன பிரதேசத்தில் மின்சாரம் தாக்கியதில் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார். அப்பிரதேசத்தில் உள்ள தேயிலை தொழிற்சாலையொன்றில் அதிகாரியாக பணிபுரியும் பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த பெண்ணின் வீட்டில் வைத்தே மின்சாரம் தாக்கியுள்ளதாகவும், அவரை புலத்சிங்கள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். கொடகவெல – எம்பிலிப்பிடிய பிரதேசத்தினை சேர்ந்த 20 வயதுடைய யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. சடலம் புலத்சிங்கள மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இன்று பிரேத பரிசோதனை இடம்பெறவுள்ளது. [alert…