சொத்து தகராறில் பலியான உயிர்

(UDHAYAM, COLOMBO) – கலஹா – தெல்தொட்ட – கபடாகம பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். சொத்து தகராறு காரணமாக, நேற்று மாலை இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர், கண்டி பொது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருவதாக காவற்துறை தெரிவித்துள்ளது. இந்த தகராறில் கபடாகம பிரதேசத்தை சேர்ந்த 65 வயதான நபரொருவரே உயிரிழந்துள்ளார்.

Read More

களிமண் குழிக்கு பலியான 11 வயது சிறுமி

(UDHAYAM, COLOMBO) – தங்கொடுவ – மெடிகோடுவ பிரதேசத்தில் களிமண் குழியொன்றில் நீராட சென்ற 11 வயது சிறுமியொருவர் அதில் மூழ்கி உயிரிழந்துள்ளார். சுப்பரமணியம் நிலக்‌ஷி என்ற தங்கொடுவ தாபரகுளிய பிரதேசத்தை சேர்ந்த ஓடு உற்பத்தி தொழிலில் ஈடுபட்டுள்ள குடும்பமொன்றின் நான்காவது குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இன்று பிற்பகல் 5 பிள்ளைகள் இந்த களிமண் குழியில் நீராட சென்றுள்ள நிலையில் அதில் இருவர் நீரிழ் மூழ்கியுள்ளனர். பின்னர் பிரதேசவாசிகள் இணைந்து அவர்களை காப்பாற்றியுள்ள நிலையில் , அதில்…

Read More

Update: பத்தனையில் சோகமயம் வெள்ளவத்தையில் இடிந்து வீழ்ந்த கட்டிடத்தில் சிக்குண்டு பலியான பத்தனை இளைஞனின் சடலம் நல்லடக்கம் செய்யப்பட்டது

(UDHAYAM, COLOMBO) – வெள்ளவத்தையில்  இடிந்து வீழ்ந்த கட்டிடத்தில் சிக்குண்டு பலியான மலையகத்தை சேர்ந்த திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிறேக்லி தோட்டத்தை சேர்ந்த 20 வயதுடைய ராமர் நிரோஷன் என்ற  இளைஞனில் சடலம் 22.05.2017 நல்லட்டக்கம் செய்யப்பட்டது கடந்த 18 ம் திகதி வெள்ளவத்தை சவோய் திரையறங்கிற்கு பின்னால் அமைந்துள்ள த எக்சலன்சி திருமண மண்டபத்தின் ஒருபகுதி இடிந்து வீழ்ந்தது இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் ஒருவரான குறித்த இளைஞனின் சடலம் கடந்த 20 ம் திகதி மீட்கப்பட்டடு…

Read More