பல்கலைக்கழக நடவடிக்கைகள் குறித்து விசேட அறிவிப்பு

(UTV|கொழும்பு)- – அனைத்து பல்கலைக்கழகங்களினதும் 4 ஆம் வருட மாணவர்களின் பரீட்சைகள் ஜூன் மாதம் 22 ஆம் திகதி ஆரம்பமாகும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் தெரிவித்துள்ளார். மேலும் குறித்த பரீட்சைகளை ஒகஸ்ட் மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் நிறைவு செய்யுமாறும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். அத்துடன், பரீட்சை நடவடிக்கைகளின் போது அனைத்து சுகாதார நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவேண்டுமெனவும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், மறு அறிவித்தல் வரை பல்கலைகழக…

Read More

பல்கலைக்கழகங்களை ஆரம்பிப்பது தொடர்பில் இறுதித் தீர்மானம் இன்று

(UTV|கொழும்பு)- பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பிலான இறுதித் தீர்மானம் இன்று(13) வௌியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த விடயம் குறித்து அனைத்து துணை வேந்தர்களையும் அழைத்து கலந்துரையாடியதாக ஆணைக்குழு தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க குறிப்பிட்டுள்ளார். பல்கலைக்கழகங்களை மீளவும் ஆரம்பிப்பது தொடர்பிலான ஆலோசனைகள் சுகாதார அமைச்சிடம் இருந்து கிடைக்கப்பெற்றுள்ள நிலையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பேராசிரியர் சம்பத் அமரதுங்க மேலும் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் பல்கலைக்கழகங்களின் மருத்துவபீட இறுதி ஆண்டு பரீட்சைகளை…

Read More

களனி பல்கலைக்கழகம் இன்று முதல் ஒரு வாரம் மூடல்

(UDHAYAM, COLOMBO) – களனி பல்கலைக்கழகம் இன்று நண்பகல் 12.00 மணியுடன் ஒரு வாரம் மூடுவதற்கு பல்கலைக்கழக நிர்வாக அதிகாரி தீர்மானித்துள்ளார். அந்த பல்கலைக்கழகத்தினுள் பரவி வரும் மர்ம காய்ச்சல் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பல்கலைக்கழத்தின் அனைத்து பீடங்களும் இவ்வாறு மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை பல்கலைக்கழகத்தில் கல்வி நடவடிக்கைள் இடம்பெறும் நிலையில், விடுதிகளில் தங்கியுள்ள அனைத்து மாணவர்களையும் இன்று நண்பகல் 12.00 மணியுடன் வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More