இலங்கை போக்குவரத்து சபையின் பஸ் வண்டிகளில் GPS தொழில்நுட்பம்
(UTV|COLOMBO)-இலங்கை போக்குவரத்து சபையின் சகல பஸ் வண்டிகளிலும் GPS தொழில்நுட்பம் பொருத்தப்படவுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் நிமால் சிறிபால டீ சில்வா தெரிவித்துள்ளார். இந்த பஸ் வண்டிகளுக்கு GPS தொழில்நுட்பத்தைப் பொருத்தி மத்திய கட்டுப்பாட்டு நிலையத்தின் ஊடாக பஸ் வண்டிகளை நிர்வகிக்க முடியும். இதன் மூலம் இலங்கை போக்குவரத்துச் சபையின் பஸ் வண்டிகளை சிறப்பாக ஒருங்கிணைக்க முடியும் என்று அமைச்சர் குறிப்பிட்டார். இலங்கை போக்குவரத்துச் சபையின் பிரதான அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊழியர்களுக்கு ஊக்குவிப்புக்…