ஐக்கிய நாடுகள் சபை இலங்கைக்கு பாராட்டு

(UTV|COLOMBO)-சிறுவர் துஷ்பிரயோகத்தைக் கட்டுப்படுத்த தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை முன்னெடுக்கும் வேலைத்திட்டத்தை ஐக்கியநாடுகள் சபை பாராட்டியுள்ளது. சமீபத்தில் சுவிற்சர்லாந்தின் ஜெனீவா நகரில் ஐக்கிய நாடுகளின் சிறுவர் உரிமைகள் குழு தொடர்பான கூட்டம் நடைபெற்றது. இதில் ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகள் இலங்கையின் திட்டத்தை வரவேற்றுப் பேசினார்கள். இந்தக் கூட்டத்தில் தெருவில் வாழும் பிள்ளைகளுக்கான விசேட வேலைத்திட்டங்கள், சிறுவர் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக குடும்பக்கட்டமைப்பை உறுதிமிக்கதாக மாற்றுதல், விழிப்புணர்வுத் திட்டங்களை முன்னெடுத்தல் போன்றவை பற்றி கூடுதல் கவனம்செலுத்தப்பட்டன.    …

Read More

நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் ஜனாதிபதியின் முயற்சிகளுக்கு சிங்கப்பூர் பாராட்டு

(UDHAYAM, COLOMBO) – நல்லிணக்கத்தை பலப்படுத்துவதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கொண்டுவரும் முயற்சிகள் பாராட்டத்தக்கவை என சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி விவியன் பாலகிருஷ்னன் தெரிவித்தார். ஜனாதிபதிசெயலகத்தில்  இன்று (18) ஜனாதிபதியை  சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். நாளை யாழ்ப்பாண நூலகத்திற்கு விஜயம் செய்து யாழ் நூலகத்திற்கு நூல்களை அன்பளிப்பு செய்யவுள்ளதாகவும் நூலக ஊழியர்களுக்கு பயிற்சி வசதிகளை வழங்கும் உடன்படிக்கையில் கைச்சாத்திடவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். யாழ்ப்பாண வைத்தியசாலையின் எலும்பு இயல் பிரிவுக்கு சிங்கப்பூர்…

Read More

இலங்கைக்கு சார்க் வலய செயலாளர் நாயகம் பாராட்டு

(UDHAYAM, COLOMBO) – நெருக்கடிகளுக்குத் தீர்வு கண்டு மின்சக்தித் துறையை வலுப்படுத்தி முன்னெடுப்பதற்கு இலங்கை அரசாங்கத்தினால் முடிந்துள்ளமை இலங்கைக்கு வெற்றியாகுமென்று சார்க் அமைப்பின்செயலாளர் நாயகம் எச்.எவ்.அம்ஜித் ஹுசைன் பி. சியால் தெரிவித்துள்ளார். அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவுடன் மின்சக்தி அமைச்சில் நேற்று இடம்பெற்ற சந்திப்பில் செயலாளர் நாயகம் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார். சார்க் வலய நாடுகளுக்கு இடையே ராஜதந்திர தொடர்புகளை வலுப்படுத்துவது இந்த சந்திப்பின் நோக்கமாகும். நிலைபேறான எரிசக்தியை விரிவுபடுத்துவதற்கு சார்க் நாடுகளுக்கு இடையே நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எரிசக்தி…

Read More

இயக்குனர் தர்மசேன பத்திராஜவுக்கு பாராட்டு விழா

(UDHAYAM, COLOMBO) – படைப்புலக வாழ்க்கையில் பொன் விழாவைக் கொண்டாடும் இயக்குனர் தர்மசேன பத்திராஜ பாராட்டிக் கௌரவிக்கப்பட்டார். பிரபல இயக்குனர் தர்மசேன பத்திராஜவின் படைப்புலக வாழ்க்கைக்கு 50 வருடங்கள் பூர்த்தியாகின்றன. இதனை முன்னிட்டு தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தரங்கனி அரங்கில் நேற்று நடைபெற்ற குறித்த பாராட்டு நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். 1974ம் ஆண்டு அஹஸ் கவ்வ என்ற திரைப்படத்தின் மூலம் திரு.பத்திராஜ இயக்குனராக அறிமுகமானார். அவர் பொன்மணி என்ற தமிழ் படம்…

Read More

காணாமல் போனோர் அலுவலகம் தொடர்பில் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு பாராட்டு

(UDHAYAM, COLOMBO) – காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தை அமைப்பதற்கான அரசாங்க வேலைத்திட்டத்தை சர்வதேச சட்டம் தொடர்பான சட்டத்தரணி திருமதி சரணி குணதிலக பாராட்டியுள்ளார். தமது உறவினர்கள் காணாமல் போனதன் காரணமாக எதிர்பார்ப்புடன் இருக்கும் தரப்பினருக்கு இதன்மூலம் நீதியை நிலைநாட்ட முடியும் என்றும் அவர் தெரிவித்தார். சில தரப்பினர் காணாமல் போனோர் தொடர்பான அலுவலங்களை அமைப்பது தொடர்பில் உரிய தெளிவின்றி செயல்படுகின்றனர். இந்த அலுவலகம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பயங்கரவாதம் நிலவிய காலப்பகுதியில் காணாமல் போனவர்களுகானது…

Read More

விபத்திற்கு உள்ளான ஹெலிகொப்டரின் விமானிக்கு பாராட்டு தெரிவித்த ஜனாதிபதி

(UDHAYAM, COLOMBO) – பத்தேகம பிரதேசத்தில் இடம்பெயர்ந்த கிராமம் ஒன்றுக்கு விமானம் ஊடாக உணவு மற்றும் வேறு அதியவசிய பொருட்களை கொண்டு செல்லும் போது விபத்திற்கு உள்ளான ஹெலிகொப்டரை செலுத்திய குறித்த விமானக் குழுவின் தலைவர் பானுக தெல்கொடவிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொலைபேசி ஊடாக தனது பாராட்டை தெரிவித்துள்ளார். நிவாரணப் பொருட்களுடன் விமானப் படைக்கு சொந்ததமான ஹெலிகொப்டர் ஒன்று தொழில்நுட்ப கோளாறு காரணமாக பத்தேக பிரதேசத்தில் விபத்திற்கு உள்ளானது. இதன்போது குறித்த ஹெலிகொப்டரில் 11 பேர்…

Read More