பாராளுமன்ற மிளகாய்த்தூள் தாக்குதலுக்கு எதிராக முறைப்பாடு
(UTV|COLOMBO)-பாராளுமன்றத்தில் நடத்தப்பட்ட மிளகாய்த் தூள் தாக்குதலுக்கு எதிராக, பாராளுமன்ற உறுப்பினர் காமினி ஜயவிக்ரம பெரேரா பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இது மிகவும் கவலைக்குரிய சம்பவம். மிளகாய்த் தூள் எனது முகத்திலும் வீசப்பட்டது. எனது கண்களை மூடுவதற்குக் கூட எனக்கு நேரம் கிடைக்கவில்லை. எவ்வளவு வேதனையை அனுபவித்தேன் என்பதை தெரிவிக்கக் கூட என்னால் முடியவில்லை. இந்த நாட்டில் ஊழல் மற்றும் மோசடியை முடிவுக்குக் கொண்டுவருவதாக நான் உறுதிமொழி எடுத்துள்ளேன். பாராளுமன்றம் மதிப்பிற்குரிய இடம். அதன் காரணமாகவே நான்…