சௌந்தர்யாவாக சாய் பல்லவி

(UTV | இந்தியா) – விமான விபத்தில் பலியான நடிகையின் வாழ்க்கை வரலாற்று படத்தில் சாய் பல்லவி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடிகைகளின் வாழ்க்கை வரலாறை படமாக எடுப்பது தற்போது வழக்கமாக உள்ளது.
இந்நிலையில், விமான விபத்தில் இறந்த நடிகை சௌந்தர்யாவின் வாழ்க்கை சினிமா படமாகிறது.

இவர் கார்த்திக் ஜோடியாக பொன்னுமணி படத்தில் அறிமுகமாகி தொடர்ந்து ரஜினிகாந்துடன் அருணாசலம், படையப்பா, சத்யராஜின் சேனாதிபதி, கமல்ஹாசனுடன் காதலா காதலா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

2004-ம் ஆண்டு பாரதீய ஜனதா கட்சிக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்ய விமானத்தில் சென்றபோது விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இது பட உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தற்போது அவரது வாழ்க்கையை படமாக்கும் ஏற்பாடுகள் நடக்கின்றன. இந்த படத்தில் சௌந்தர்யா கதாபாத்திரத்தில் நடிக்க சாய்பல்லவியிடம் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *