பிணைமுறி ஆணைக்குழு மற்றும் பாரதூரமான மோசடிகள் பற்றிய விசாரணை அறிக்கைகள் இன்று பாராளுமன்றத்தில்
(UTV|COLOMBO)-மத்திய வங்கி பிணைமுறி விவகாரம் பற்றி விசாரித்த ஆணைக்குழுவின் அறிக்கையும், பாரதூரமான ஊழல் மோசடிகள் பற்றி விசாரித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையும் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளன. இது தொடர்பாக சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நேற்று பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் நடத்தப்பட்ட விசேட கட்சித்தலைவர் கூட்டமொன்றில் தீர்மானிக்கப்பட்டது. பிணைமுறி அறிக்கை தொடர்பில் பெப்பரவரி மாதம் 10 ஆம் திகதிக்கு முன்னர் விவாதம் ஒன்று நடத்தப்பட வேண்டும் என்று முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக இன்று கூடும் கட்சி தலைவர்வர்களின்…