கழிவுகளை மீள்சுழற்சிக்கான திண்ம கழிவுகளை முறையாக வகைப்படுத்தும் வேலைதிட்டம் ஹட்டன் பிரதேச பாலர் பாடசாலை மாணவர்களினால் முன்னெடுப்பு

(UDHAYAM, COLOMBO) – மீள் சுழற்சிக்கான திண்ம கழிவுகளை வகைப்படுத்தல் தொடர்பிலான விழிப்பூட்டும் வேலைத்திட்டம் ஹட்டன் பிரதேச பாலர் பாடசாலை மாணவல்களினால் 18.07.2017 முன்னெடுக்கப்பட்டது சிறுவர்களிடத்திலும்  சிறுவர்களினூடாக பெரியோரிடத்திலும் முறையாக கழிவுகளை வகைப்படுத்துவது தொடர்பிலான விழிப்புணர்வை  ஏற்படுத்தும் வகையில்  ஹட்டன் டிக்கோயா நகரசபை மற்றும் பாலர் பாடசா லை மாணவர்களும் இணைந்து மேற்படி  வேலைத்திட்டத்தை  முன்னெடுத்தனர் மாணவர்களினால் கழிவுகளை எவ்வாறு வகைப்படுத்தல் தொடர்பில் பாதாதைகளும் பல்வேறு காட்சிகளும் ஏந்திய வண்ணம் ஹட்டன் நகரில் கிடந்த கழிவுகளை முறையாக…

Read More

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்கான ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் – [IMAGES]

(UDHAYAM, COLOMBO) – கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்கான ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் இன்று காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.குறித்த ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் முற்பகல் 9.30 மணியளவில் ஆரம்பமாகியது இதில் இணைத்தலைவர்களான இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், மாவை சேனாதிராஜா மற்றும்  நாடாளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் இராமநாதன் தலைமையில் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்கான ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் இடம்பெற்றது. ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் மக்கள் பிரதிநிதிகளாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்…

Read More

பளை பிரதேச செயலக 2வது நிர்வாகக் கட்டிடத்தை கிளி அரச அதிபர் திறந்து வைத்தார்

(UDHAYAM, COLOMBO) – கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தின் இரண்டாவது நிர்வாகக்கட்டிடத்தினை கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திரு. சுந்தரம் அருமைநாயகம் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு இன்று  வெள்ளிக்கிழமை  திறந்து வைத்துள்ளார். மக்களுக்கான சேவையினை தடையின்றி வழங்கும் முகமாக பிரதேச செயலகங்களின் வளங்களை விருத்தி செய்யும் முகமாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் பிரதேச செயலகங்களில் புதிய கட்டிடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் பளை பிரதேச செயலகத்தில் மேற்படி அமைச்சின் நிதி உதவியுடன்…

Read More

கொழும்பு பிரதேச குப்பைகள் தொடர்பான பிரச்சினையை தீர்ப்பதற்கு பிரதமர் நடவடிக்கை

(UDHAYAM, COLOMBO) – கொழும்பு புறக்கோட்டை பிரதேசங்களில் குப்பைகள் தேவையற்ற விதத்தில் குவிக்கப்பட்டதன் காரணமாக எதிர்நோக்கப்பட்டுள்ள பிரச்சினை குறித்த விடயங்களை கண்டறிவதற்காக பிரதமர் ரணில் விக்கிரம சிங்க  அப்பிரதேசத்திற்கு விஜயம் செய்தார். பிரதமருடன் நேற்று காலை பிரதமர் அலுவலக பணியாளர் சபையின் தலைமை அதிகாரியும் , சட்ட  ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்கவும் சென்றிருந்தார். போதிராஜ மாவத்தை மற்றும் இலங்கை போக்குவரத்துசபை பஸ் தரிப்பு நிலையத்திற்கு அருகாமையிலும் குவிக்கப்பட்டிருந்த குப்பைகளை பிரதமர் பார்வையிட்டார்….

Read More

பாதிக்கப்பட்ட பிரதேச கழிவுகளை அகற்ற முறையான வேலைத்திட்டம் –ஜனாதிபதி

(UDHAYAM, COLOMBO) – அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் கழிவுகளை அகற்றுவதற்கு முறையான வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களில் கழிவு முகாமைத்துவத்தை முறைப்படுத்தல் தொடர்பாக இன்று (06) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார். கழிவு முகாமைத்துவம் தொடர்பான புதிய சட்டங்களை அறிமுகப்படுத்தி கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள கழிவு முகாமைத்துவ செயற்திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி இதன்போது…

Read More

மொரவௌ பிரதேச செயலகத்திற்கு சிறந்த வெசாக்கூடு தயாரிப்பு விருது

(UDHAYAM, COLOMBO) – ஜக்கிய நாடுகளின் 14வது சர்வதேச வெசாக் தினத்தை முன்னிட்டு பக்தி கீதங்கள் மற்றும் போட்டி நிகழ்ச்சிகள் என்பன திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஸ்பகுமாரவின் தலைமையில் நடைபெற்றது. திருகோணமலை மாவட்ட செயலகத்தினால் மாவட்ட செயலக வளாகத்தில் கடந்த சனிக்கிழமை பிரதேச செயலகம் மற்றும் மாவட்ட செயலக பிரிவுகளிற்கிடையே வெசாக்கூடு தயாரிப்பு போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியில் முதலாம் இடத்தை மொரவௌ பிரதேச செயலகமும் இரண்டாம் இடத்தினை கோமரங்கடவெல பிரதேச செயலகம் மற்றும் மூன்றாம்…

Read More

கிண்ணியா பிரதேச பாடசாலைகள் அனைத்தும் இன்று முதல் இயக்கம்

(UDHAYAM, COLOMBO) – திருகோணமலை மாவட்டம், கிண்ணியா பிரதேசத்தில் டெங்கு காரணமாக கடந்த வாரம் 3 நாட்களாக மூடப்பட்ட 66 பாடசாலைகளும் இன்று முதல் வழமை போல் இயங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிண்ணியா வலய கல்வி பணிப்பாளர் ஏ.ம். அஹமட் லெப்பை இதனைத் தெரிவித்துள்ளார். இதற்கு காரணம் கிண்ணியாவில் டெங்குவின் தாக்கம் குறைவான போதிலும், கிண்ணியாவின் தளவைத்தியசாலையில் நேற்று முன்தினம் மட்டும் 84 பேர் டெங்கு தாக்கத்திற்கு உள்ளாகி அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read More