பெருந்தோட்டத்துறை பிரதேசங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை-ஜனாதிபதி
(UTV|COLOMBO)-பெருந்தோட்டத் துறையில் உற்பத்திகளின் தரத்தை மேம்படுத்துவதற்கான மாற்றங்களை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார். தேயிலை உட்பட ஏனைய உட்பத்தி பொருட்கள் தொடர்பிலேயே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். தலவாக்கலையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார். அதற்காக விசேட நிபுணர் குழுவொன்று நியமிக்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். தேயிலை மீள் நடுகை மற்றும் மலைநாட்டு சுற்றாடலை பாதுகாத்தல் போன்றவையும் அவற்றுள் உள்ளடங்கும் எனவும் அவர் குறிப்பிட்டார். அத்துடன், பெருந்தோட்டத்துறை பிரதேசங்களில்…