சட்டமூல பிரேரணை விலக்கிக்கொள்ளப்படவில்லை – சபை முதல்வர் அறிவிப்பு

(UDHAYAM, COLOMBO) – பலவந்தமான முறையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பாதுகாப்புக்கான சர்வதேச ஒப்பந்தம் குறித்த சட்டமூல பிரேரணை விலக்கி கொள்ளப்படவில்லை. இன்றைய பாராளுமன்ற அமர்வின் போது சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல இந்த விடயத்தை தெரிவித்தார். இந்த சட்டமூலம் தொடர்பான பிரேரணை பாராளுமன்றத்திலிருந்து விலக்கிக்கொள்ளப்பட்டதாக இன்று வெளியான தேசிய பத்திரிக்கையொன்றில் வெளியிடப்பட்டுள்ளது. இது தொhட்ர்பாகவே அமைச்சர் சுட்டிக்காட்னார். இது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படாவிட்டாலும் சபை ஒழுங்கு பத்திரத்தில் இடம்பெற்றிருப்பதாகவும் அமைச்சர் இதனை தெரிவித்தார்.

Read More

பட்டதாரிகளின் பிரச்சினை தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவரின் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை

(UDHAYAM, COLOMBO) – அரசாங்க தொழில்கோரி வடக்கு, கிழக்கில் போராட்டத்தில் ஈடுபடும் பட்டதாரிகளின் பிரச்சினைக்குத் தீர்வுகாணுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையொன்றை கொண்டுவரவுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனால், நாளைய தினம் இந்தப் பிரேரணை முன்வைக்கப்படவுள்ளது. தமக்கு தொழில் வழங்க வேண்டும் எனற கோரிக்கையை முன்வைத்து  வடக்கு, கிழக்கிலுள்ள பட்டதாரிகள் கடந்த பல வாரங்களாக தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்த நிலையில், மத்திய அரச சேவையிலும், வடக்கு, கிழக்கு மாகாண…

Read More