புல்மோட்டையில் மக்கள் காங்கிரஸின் தேர்தல் பிரசாரக் கூட்டம்!
(UTV|TRINCOMALEE)-திருகோணமலை மாவாட்டத்தில் குச்சவெளி பிரதேச சபையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மயில் சின்னத்தில் தனித்துப் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, புல்மோட்டையில் இன்று காலை (07) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கட்சியின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் சிறப்புரை ஆற்றினார். திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப் தலைமையில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில், கிண்ணியா நகரசபை முன்னாள் தவிசாளரும், மக்கள் காங்கிரஸின் இளைஞர் விவகாரப் பணிப்பாளருமான டாக்டர். ஹில்மி மஹ்ரூப் உட்பட மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்களும் பங்கேற்றிருந்தனர்….