சுமார் ஒன்றரை கோடி ரூபா பெறுமதியுடைய ஹெரோயினுடன் பாகிஸ்தான் நாட்டவர் கைது
(UDHAYAM, COLOMBO) – ஒரு கிலோ 36 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் பாகிஸ்தான் நாட்டவர் ஒருவர் கட்டுநாயக்கவில் கைதுசெய்யப்பட்டுள்ளார். நேற்று இரவு அவர் கைதுசெய்யப்பட்டதாக சுங்கத்திணைக்கள அதிகாரியொருவர் தெரிவித்தார். அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப்பொருளின் பெறுமதி ஒரு கோடியே 40 லட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. கைதுசெய்யப்பட்ட பாகிஸ்தான் நாட்டவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.