முல்லைத்தீவு மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்களது பணிப்புறக்கணிப்பு தொடர்கிறது

UTV | COLOMBO – முல்லைத்தீவு மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்களது பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்றும் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் சற்குணராசா இதனைத் தெரிவித்துள்ளார். வடமாகாண வீதி அனுமதி பத்திரம் வழங்குதில் தாங்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்து இந்த போராட்டம் இடம்பெறுகிறது.

Read More

பேருந்து மீது கல்வீச்சு தாக்குதல்

(UTV|JAFFNA)-யாழ்ப்பாணத்தில் இருந்து கண்டி நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்றின் மீது, கல் வீசப்பட்ட சம்பவம் தொடர்பில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, கனகராயன்குளம் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். நேற்று இவர்கள் கைதாகியுள்ளனர். குறித்த பஸ் கனகராயன்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்த போதே, இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதேவேளை, இந்தத் தாக்குதலால் பஸ்ஸின் கண்ணாடிகள் சில சேதமடைந்துள்ளதோடு, பயணிகளுக்கும் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர். இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட ஐவரையும்…

Read More

கிளிநொச்சி பேருந்து நிலையத்தில் சிறுவியாபாரிகளுக்கு கிடைக்காத அனுமதி பெரும் உணகவக உரிமையாளறிற்கு

(UDHAYAM, COLOMBO) – கிளிநொச்சி பொதுச் சந்தைக்கு முன்னால் முன்னர் இருந்த பேருந்து நிலையத்தில்  பெண் தலமைத்துவக் குடும்பங்கள் மற்றும்   முதியவர்களால் தமது வாழ்வாதாரத்திற்கு  நடத்துகின்ற சிறு பெட்டிக்கடைகளுக்கு சட்டத்தில்  கிடைக்காத அனுமதி கிளிநொச்சி டிப்போ சந்தியில் அமைய உள்ள பிரதான  பேருந்து நிலையத்தில்  கிளிநொச்சியில் உணவகம் ஒன்றினை நடத்திவருகின்ற பெரும் வரத்தகர் ஒருவருக்கு கடை ஒன்றினை நடத்துவதற்கு கிளிநொச்சி கரச்சி பிரதேச சபையால் அனுமதி வழங்கப்பட்டுள்ளமை கிளிநொச்சியில் சிறுவியாபாரங்களில் ஈடுபட்டு வருபவர்கள் மத்தியில் கவலையை ஏற்ப்படுத்தி…

Read More

நிக்கவெரட்டியவில் பேருந்து விபத்து – 36 பேர் காயம்

(UDHAYAM, COLOMBO) – ஆடைத்தொழிற்சாலை ஒன்றுக்கு பணிப்பெண்களை ஏற்றிச் சென்ற பேருந்தொன்று இன்று காலை விபத்திற்குள்ளாகியுள்ளது. நிக்கவெரட்டிய பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 36 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அதில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். குறித்த பேருந்து பாதையை விட்டு விலகி அருகில் இருந்த மரம்மொன்றில் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Read More

சிறைச்சாலை பேருந்து மீது துப்பாக்கி பிரயோகம்:மேலும் ஒரு சந்தேக நபர் கைது

(UDHAYAM, COLOMBO) – களுத்துறை சிறைச்சாலை பேருந்து மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மல்வத்து – ஹிரிபிட்டிய – கினிகமயில் மேற்கொள்ளப்பட்டுள்ள சோதனை நடவடிக்கையின் போதே குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Read More

Update :களுத்துறை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

  (UDHAYAM, COLOMBO) – இன்று காலை களுத்துறை சிறைச்சாலை பேருந்து மீது மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்து மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மேலும் ஒரு சிறை அதிகாரியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த மேலும் 3 பேர் நகொட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் சிறை அதிகாரி மற்றும் பிரபல பாதாளக் குழுவின் உறுப்பினரான சாந்த என்றழைக்கப்படும் சமயன் உள்ளிட்ட 5…

Read More