பொலிஸ் ஊடகப் பேச்சாளராக மீண்டும் ருவான் குணசேகர !

(UDHAYAM, COLOMBO) – முன்னதாக ஊடகப் பேச்சாளராக கடமையாற்றி வந்த பிரியந்த ஜெயக்கொடி, மருத்துவ தேவைகளின் நிமித்தம் பதவியிலிருந்து விலகுவதாக தீர்மானித்துள்ளார். அதனைத் தொடர்ந்து குறித்த பதவிக்கு ருவான் குணசேகர மீண்டும் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொலிஸ் மா அதிபராக பூஜித் ஜயசுந்தர நியமிக்கப்பட்டதன் பின்னர், அப்போது ஊடகப் பேச்சாளராக கடமையாற்றிவந்த ருவான் குணசேகர இடை நிறுத்தப்பட்டு பிரியந்த ஜெயக்கொடி நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read More

விபத்தில் பொலிஸ் அதிகாரி காயம்

(UDHAYAM, COLOMBO) – நோட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒஸ்போன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் காயமுற்ற பொலிஸ் அதிகாரியொருவர் நாவலபிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நோட்டன் பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்தனர் நோட்டன் ஹட்டன் பிரதான பாதையில் ஒஸ்போன் கிளவட்டன் பகுதியிலே 24.05.2017 மாலை 5.15 மணியளவில் விபத்து சம்பவித்துள்ளது ஹட்டன் பகுதியிலிருந்து வந்த முச்சக்கரவண்டியும் நோட்டன் பகுதியிலிருந்து வந்த மோட்டார் சைக்கிலுமே மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது மோட்டார் சைக்கிலில் வந்த வட்டவலை பொலிஸ் நிலையத்தில் கடமை புரியும் பொலிஸ் அதிகாரி டிக்கோயா…

Read More

பிலியந்தளை பொலிஸ் அதிகாரிகள் மீது தாக்குதல் – அறிக்கை சமர்ப்பிக்குமாறு அமைச்சர் சாகல ரட்நாயக்காபொலிஸ்மா அதிபருக்கு உத்தரவு

(UDHAYAM, COLOMBO) – பிலியந்தளை மொரட்டுவை வீதியில் அரச  வங்கிக்கு முன்னால் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகம் பற்றி அறிக்கை சமர்ப்பிக்குமாறு சட்டம் ஒழுங்கு தொடர்பான அமைச்சர் சாகல ரட்நாயக்க பொலிஸ்மா அதிபரை உத்தரவு பிறப்பித்துள்ளார். போதைப் பொருள் சுற்றிவளைப்பிற்காக சென்ற பொலிஸ் அதிகாரிகள் மீது தாக்குதப்பட்ட  இந்த சம்பவத்தில் ஒரு பொலிஸ் அதிகாரி உயிரிழந்துள்ளதோடு, மற்றுமொரு அதிகாரி காயமடைந்து அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூன்று நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்….

Read More