சுனில் ஜயவர்தனவின் கொலையை வன்மையாக கண்டித்துள்ள போக்குவரத்து அமைச்சர்

(UTV | கொழும்பு) – இலங்கை சுயதொழிலாளர்கள் தேசிய ஓட்டோ சங்கத்தின் தலைவர், சுனில் ஜயவர்தன தாக்கிக் கொலை செய்யப்பட்டதை வன்மையாகக் கண்டிப்பதாக, போக்குவரத்து சேவை அமைச்சர், மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அறிக்கையொன்றை வெளியிட்டே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தமது சங்க உறுப்பினர்கள் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகளிலிருந்து பாதுகாப்பு பெறவும் மற்றும் சுதந்திரமாக தொழிலை முன்னெடுத்துச் செல்வதற்கான பின்னணியை உருவாக்குமாறு மாத்திரமே சுனில் ஜயவர்தன கோரிக்கை விடுத்து வந்தாரென, போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீரவின் அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன்…

Read More

போக்குவரத்து அபராத சீட்டை வீட்டிற்கே அனுப்பும் திட்டம்

(UTV|COLOMBO)-போக்குவரத்து ஒழுங்கு விதிமுறைகளை மீறுபவர்களுக்கு வழங்கப்படும் அபராத பண சீட்டை சம்பந்தப்பட்ட நபரின் வீட்டுக்கு அனுப்பி வைக்கும் நடைமுறையை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக சட்ட ஒழுங்கும் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்தார். போக்குவரத்து கடமைகளில் ஈடுப்படும் காவற்துறையினருக்கு தேசிய செஞ்சிலுவை சங்கத்தினால் ஏற்பாடு செய்திருந்த முதலுதவி பயிற்சி வழங்கும் வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பன நிகழ்வில் கலந்து கொண்ட போது அமைச்சர் இதனை குறிப்பிட்டார். அதன்படி , விதிமுறைகளை மீறும் சந்தர்பத்தில் அதனை புகைப்படம் எடுத்து அந்த குற்றத்திற்கான…

Read More

போக்குவரத்து விதிமுறை மீறலுக்கான தண்டப்பண ஆய்வு அறிக்கை ஜனாதிபதியிடம் சமர்ப்பிப்பு

(UDHAYAM, COLOMBO) – வீதிப் போக்குவரத்து விதிமுறைகளை மீறியமைக்காக அறவிடப்படும் தண்டப் பணத்தை அதிகரிப்பது தொடர்பில் ஆராய்வதற்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட குழுவின் இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது. ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று முற்பகல் இந்த நிகழ்வில் போக்குவரத்து, சிவில் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் நிஹால் சோமரத்னவினால் குறித்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது. போக்குவரத்துச் சட்டங்களை மீறுவதைக் குறைக்கும் வகையிலும் வீதி விபத்துக்களைத் தவிர்க்கும் நோக்குடனும் வீதி போக்குவரத்து விதிமுறைகளை மீறியமைக்காக குறைந்தபட்ச தண்டப்பணமாக…

Read More

கிளிநொச்சில் கனரக வாகனங்கள் இரண்டு விபத்து இருவர் வைத்தியசாலையில் போக்குவரத்து தடை – [IMAGES]

(UDHAYAM, COLOMBO) – நேற்று இரவு பதினொன்று முப்பது மணியளவில் கண்டாவளை  வெளிக்கண்டல் பாலத்திற்கு அருகில் இரண்டு கனரக வாகனங்கள்  நேருக்குநேர் மோதுண்டதில் இருவர் தர்மபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் பரந்தன் பகுதியில் இருந்து புதுக்குடியிருப்பு பக்கமாக சென்றுகொண்டிருந்த டிப்பர் வாகனமும் முல்லைத்தீவிலிருந்து  பரந்தன்  நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த  லொறி இரக வாகனமும் வெளிக்கண்டல் பகுதியில் நேருக்கு நேர் மோதுண்டதனாலையே  குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது என பொலிசார்  தெரிவிக்கின்றனர் …

Read More

போக்குவரத்து ஒழுங்கு விதிகளை மீறிய 1900 சாரதிகளுக்கு எதிராக அபராதம்

(UDHAYAM, COLOMBO) – போக்குவரத்து ஒழுங்கு விதிகளை மீறிய ஆயிரத்து 990 சாரதிகளுக்கு எதிராக தண்டப்பணச்சீட்டு விநியோகிக்கப்பட்டுள்ளதாக காவற்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது. காவற்துறை தலைமையகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பொன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. தண்டப்பணச்சீட்டுக்கு மேலதிகமாக போக்குவரத்து ஒழுங்கு விதிகள் தொடர்பான ஆலோசனை வகுப்புக்களிலும் கலந்து கொள்ள வேண்டும் என அவர்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் முதல் கொழும்பு நகர் மற்றும் கொழும்பு நகருக்கு நுழையும் முதன்மை வீதிகளில் போக்குவரத்து சட்டங்கள் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படுகின்றமை குறிப்பிடதக்கது.

Read More

தெற்கு அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்து

(UDHAYAM, COLOMBO) – தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் போக்குவரத்து நடவடிக்கைகள் அடுத்த வாரத்தில் மீண்டும் வழமை நிலைக்கு திருத்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிவேக நெடுஞ்சாலை பராமரிப்பு மற்றும் நடவடிக்கைகள் பணிப்பாளர் சமன் ஓப்பநாயக்க இது குறித்து தெரிவிக்கையில், தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் போக்குவரத்து நடவடிக்கைகள் எதிர்வரும் வாரத்தில் வழமை நிலைக்குத் திரும்பும் என்றார். கொக்மாதுவ என்ற இடத்தில் மண்சரிவினால் வீதியில் மண்மேடு இடிந்து வீழ்ந்தது. இதனால் கொழும்பிலிருந்து மாத்தறைக்கான ஒரு நிரல் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டது. இந்த…

Read More

பொரளை போக்குவரத்து காவற்துறை பிரிவின் பொறுப்பதிகாரி மீண்டும் விளக்கமறியலில்

(UDHAYAM, COLOMBO) – தங்க நகை கொள்ளை சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள பொரளை போக்குவரத்து காவற்துறை பிரிவின் பொறுப்பதிகாரி இந்த மாதம் 16 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் அவரை இன்று முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Read More

தெற்கு அதிவேக வீதியில் போக்குவரத்து பாதிப்பு

(UDHAYAM, COLOMBO) – தெற்கு அதிவேக வீதியில் வெலிபன்ன நுழைவாயில் மற்றும் கொக்மாதுவ நுழைவாயில்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளமை காரணமாக போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அதிவேக வீதியில் பயணிப்பதற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு காவற்துறை சாரதிகளை கோரியுள்ளது.

Read More