இரண்டாவது நாளாகவும் தொடரும் தொடரூந்து பணிப்புறக்கணிப்பு போராட்டம்
(UTV|COLOMBO)-தொடரூந்து இயந்திர சாரதிகள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கிறது. இதன்காரணமாக நேற்று முதல் இதுவரை சுமார் 276 தொடரூந்து போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தொடரூந்து கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. இயந்திர உதவியாளர்களை இணைத்து கொள்வதற்கான முறைமையை உரிய வகையில் அமுல்படுத்தாமைக்கு எதிராகவே இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இது தொடர்பில் நேற்றைய தினம் போக்குவரத்து அமைச்சின் செயலாளர் ஜீ.எஸ் விதானகேவுடன் பேச்சுவார்தை ஒன்று நடாத்தப்பட்டது. இந்த பேச்சுவார்தை வெற்றியளிக்காத நிலையில் தொடரூந்து இயந்திர…