மகரகம ஆயுர்வேத திணைக்களத்தின் அதிகாரிகள் இரண்டு பேர் கைது
(UTV|COLOMBO)-இலஞ்சம் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் மகரகம ஆயுர்வேத திணைக்களத்தின் அதிகாரிகள் இரண்டு பேர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளனர். மகரகம ஆயுர்வேத திணைக்களத்தில் பணியாற்றும் சட்ட அதிகாரி ஒருவரும் ஆயுர்வேத வைத்தியர் ஒருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. 50,000 ரூபா பணத்தை இலஞ்சமாக பெற்றுக் கொண்ட குற்றத்தில் மகரகம ஆயுர்வேத திணைக்களத்தின் அலுவலகத்தில் வைத்து இரண்டு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆயுர்வேத உற்பத்தி நிறுவனம் ஒன்றின் ஆண்டுக்கான அனுமதிப்பத்திரத்தைப் புதுப்பித்துக் கொள்வதற்காக…