பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னக்கோனை சிபாரிசு செய்த விடயத்தில் அரசியலமைப்பு பேரவை எந்த தவறையும் செய்யவில்லையென்றும் தான் சரியாகவே நடந்துகொண்டார் என்றும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்ட தேசபந்து தென்னக்கோனின் சேவையை இடைநிறுத்த உயர்நீதிமன்றம் மேற்கொண்டுள்ள தீர்மானத்திற்கான வியாக்கியானத்தை எவரும் அறிய விரும்பினால் நீதிமன்றத்திற்கு செல்வதே நல்லதென சபாநாயகர் மேலும் கூறியுள்ளார்