இந்தியா மற்றும் இலங்கை மகளிர் அணிகள் இன்று
(UDHAYAM, COLOMBO) – சர்வதேச கிரிக்கட் பேரவையின் மகளிர் வெற்றிக்கிண்ண 2017 போட்டித்தொடரில் இந்திய மகளிர் அணி முன்னிலையில் உள்ளது. இத்தொடரில் இலங்கை அணி 6வது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த போட்டித்தொடரில் தமது நிலையை முன்னிலைப்படுத்துவதற்கு இலங்கை அணி தயாராகி வருகின்றது. இந்தியா மற்றும் இலங்கை மகளிர் அணிகளுக்கிடையிலான போட்டி இன்று டெர்பியில் பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.