இரணைதீவு மக்களை மீள்குடியேற்ற அனுமதிக்குமாறு கோரி பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் ஜனாதிபதிக்கு கடிதம்!
(UDHAYAM, COLOMBO) – இரணைதீவு மக்களை அவர்களது பூர்வீக வாழ்விடங்களில் மீள்குடியேற்றுமாறு கோரி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார். இரணைதீவு மக்கள் தம்மைத் தமது பூர்வீக வாழ்விடத்தில் குடியேறி வாழ அனுமதிக்குமாறு கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இந்நிலையில் போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் கலந்துகொண்டு மக்கள், பங்குத்தந்தை ஆகியோருடன் கலந்துரையாடிய பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறீசேனாவுக்கு இரணைதீவு மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் விசேட கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்….