மட்டக்களப்பில் கரையொதுங்கியவை பாம்புகள் அல்ல

(UTV|BATTICALO)-மட்டக்களப்பு கரையோர பகுதியில் சமீபத்தில் கரையொதுங்கிய மற்றும் பிடிக்கப்பட்டவை ஒருவகை மீன் இனமே. இவை பாம்புகள் அல்ல என்று மட்டகளப்பு அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் எம்.சி.எஸ்.மொஹமட் தெரிவித்தார். மட்டக்களப்பில் கடற்கரையோரபகுதிகளில் கரையொதுங்கிய மற்றும் மீனவர்களால் பிடிக்கப்பட்டவை பாம்புகள் என தெரிவிக்கப்பட்டமை குறித்து இடர்முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர் கருத்து வெளியிட்டார். அத்துடன் இவ்வாறான பாம்புகள் கரையொதுங்குவதினால் சுனாமி ஏற்படுவதற்கான அறிகுறிகள் என்று தெரிவிக்கப்பட்டமை தொடர்பில் அவர் எமது செய்திப்பிரிவிற்கு விளக்கமளித்தார். சுனாமி அனர்த்தம் ஏற்படுமாயின் அதற்கு முன்னர் கடலில்…

Read More

மட்டக்களப்பில் தீவிரமாக பரவி வரும் டெங்கு

  (UDHAYAM, COLOMBO) – மட்டக்களப்பு மாநகர சபை பிரதேசத்தில் டெங்கு நோய் தீவிரமாக பரவிவருவதாக தெரிவிக்கப்படுகிறது. பிந்திய நிலையில் ஒரு மாத குழந்தை ஒன்று டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார். இந்த வருடத்தின் முதல் ஆறுமாத காலப்பகுதியில் மட்டக்களப்பில் டெங்கினால் மூன்று பேர் பலியாகியுள்ளதுடன் 978 பேர் பாதிக்கப்படடுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த நிலையில், இன்று காலை பாடசாலைகளில் டெங்கு விழிப்பூட்டல் நிகழ்வுகள் இடம்பெற்றன….

Read More

மட்டக்களப்பில் லங்கா சதொச

(UDHAYAM, COLOMBO) – மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலையில் லங்கா சதொச கிளை திறக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் பட்டிருப்பு தொகுதியின் அமைப்பாளர் எஸ்.கணேசமூர்த்தி தலைமையில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற இந்த நிகழ்வில் வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சர் றிஷாட் பதியுத்தீன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். கொக்கட்டிச்சோலையில் திறந்து வைக்கப்பட்டுள்ள இந்த லங்கா சத்தொச கிளை இலங்கையில் 378வது கிளையாகும். இந்த நிகழ்வில் கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, பிரதி அமைச்சரின் இணைப்பாளர்களான எஸ்.லோகநாதன்,…

Read More

மட்டக்களப்பில் சர்வதேச புகைத்தலுக்கு எதிரான தினம்

(UDHAYAM, COLOMBO) – சர்வதேச புகைத்தலுக்கு எதிரான தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்துக்கான முதலாவது கொடி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ஸ்க்கு வழங்கப்பட்டது. மாவட்ட திவிநெகும பிரதிப்பணிப்பாளர் எம்.குணரெத்தினம், திவிநெகும வங்கி முகாமையாளர்கள் மற்றும் அதிகாரிகள் மாவட்ட அரசாங்க அதிபருக்கு கொடியை நேற்றி வழங்கி வைத்தனர். நேற்று ஆரம்பமான கொடிவாரம் ஜூன் மாதம் 30ம் திகதி வரை ஒரு மாத காலத்திற்கு நடைமுறைப்படுத்தப்படுகிறது. நாடளாவிய ரீதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள குறித்த கொடி செயற்திட்டம் இவ்வருடம் ‘தீய…

Read More

மட்டக்களப்பில் 23100 ஏக்கர் நிலப்பரப்பில் சிறுபோக வேளாண்மை

(UDHAYAM, COLOMBO) – 2017ம் ஆண்டு சிறுபோகத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று – வெல்லாவெளி பிரதேசசெயலாளர் பிரிவில் வேளாண்மை செய்கை தொடர்பான தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன. போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்கான நீர்ப்பாசனத்திட்டங்களுக்கான சிறுபோக ஆரம்பக் கூட்;டம் நேற்றைய தினம் வெல்லாவெளி கலாச்சார மத்திய நிலையத்தில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன் தலைமையில் நடைபெற்றது. இதன்போது போரதீவுப்பற்று – வெல்லாவெளி பிரதேசசெயலாளர் பிரிவில் 23100 ஏக்கர் நிலப்பரப்பில் சிறுபோக வேளாண்மை செய்கை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தின்…

Read More