மத்திய கிழக்கு நாடுகளில் பணியாற்றுகின்ற இலங்கையர்களின் வருமானம் சரிவு

(UDHAYAM, COLOMBO) – மத்திய கிழக்கு நாடுகளில் பணியாற்றுகின்ற இலங்கையர்களின் வருமான வீதம் குறைவடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு நிலவுகின்ற பொருளாதார மற்றும் அரசியல் சூழ்நிலைகள், இலங்கை பணியாளர்களின் வேதனத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கடந்த ஏப்ரல் மாதம் 15 சதவீதமாக வருமானம் குறைவடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Read More

மத்திய மாகாணசபையின் தமிழ் முற்போக்குக் கூட்டணியினர் கண்டி உதவி இந்திய தூதுவரைச் சந்தித்தனர்

(UDHAYAM, COLOMBO) – மத்திய மாகாணசபையின் தமிழ் முற்போக்குக் கூட்டணியினர் கண்டி உதவி இந்திய தூதுவரைச் சந்தித்தனர். தமிழ் முற்போக்குக் கூட்டணியின் மத்திய மாகாணசபை உறுப்பினர்கள் இன்று கண்டி உதவி இந்திய தூதுவர் ராதா வெங்கட்ராமனைச் சந்தித்தனர். இந்தச்சந்திப்பில் மத்திய மாகாணசபை உறுப்பினர்களான சோ.ஸ்ரீதரன் , சிங்.பொன்னையா , எம்.ராம். ஆர்.இராஜாராம் , திருமதி சரஸ்வதி சிவகுரு ஆகியோர் கலந்து கொண்டனர். மத்திய மாகாணசபையின் ஆளுங்கட்சி தரப்பைச் சேர்ந்த தமிழ் முற்போக்குக் கூட்டணியைச் சேர்ந்த ஆறு உறுப்பினர்கள்…

Read More

மத்திய மாகாண பட்டதாரி ஆசிரியர் நியமனம் இலகுவாக கிடைத்த ஒன்றல்ல – மத்திய மாகாண சபையில் கணபதி கனகராஜ்

(UDHAYAM, COLOMBO) – தற்போது மத்திய மாகாண  தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கு 730 பட்டதாரிகளுக்கு  நியமனம் வழங்கிய மத்தியமாகாண கல்வி அமைச்சுக்கும்  முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கவிற்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக நேற்று நடைபெற்ற மத்திய மாகாணசபை அமர்வில் கலந்து கொண்டு பேசிய மாகாணசபை உறுப்பினர் கணபதி கனகராஜ் தெரிவித்தார். மத்திய மாகாண சபையின் அமர்வு பல்லேகலை மாகாண சபை கட்டிட தொகுதியில் சபை தலைவர் எல்.டி நிமலசிரி தலைமையில் நடைபெற்றது. அதில் கணபதி கனகராஜ் தொடர்ந்து…

Read More

மத்திய மாகாணத்திலும் அம்பியூலன்ஸ் வண்டி சாரதிகள் வேலை நிறுத்தபோராட்டம்

(UDHAYAM, COLOMBO) – அனைத்து மாகாணசபைகளிலும் சுகாதார நோயாளர் அம்பியூலன்ஸ் வண்டி சேவை உறுவாக்கம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து  அம்பியூலன்ஸ் வண்டி  சாரதிகள்  27.06.2017 காலை 8 மணிமுதல்   வே லை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் இலங்கை சுகாதார சேவைகள் சங்கத்தினால் முன்னெடுக்கப்படும் இவ் ஆர்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மத்திய மாகாணத்திற்குட்பட்ட அம்பியூலன்ஸ்  சாரதிகளும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர் நோயாளர்களின் நலன் கருதி அவசர சேவைக்கென தலா 1 சாரதிகள் மாத்திரம் கடமையில்…

Read More

கல்வி இராஜாங்க அமைச்ருக்கும் எனக்கும் அரசியல் போட்டி இல்லை மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் ராமேஸ்வரன் தெரிவிப்பு

(UDHAYAM, COLOMBO) – இராஜாங்க கல்வி அமைச்சர் இராதாகிருஷ்னனுக்கும் எனக்கும் எவ்வித அரசியல் போட்டியும் கிடையாது. சென்மேரிஸ் மத்தியகல்லூரியின் பரிசளிப்பு விழாவில் ராமேஸ்வரன் புகழராம். மத்திய மாகாணத்தின் கல்வி வளர்ச்சியில் இராஜாங்க கல்வி அமைச்சர் இராதாகிருஷ்னனுக்கும் எனக்கும் எவ்வித அரசியல் போட்டிகளும் கிடையாது மத்திய மாகாணத்தில் உள்ள பாடசாலைகளுக்கு அனைத்துகும் நாங்கள் இருவரும் இனைந்தே எங்களது சேவைகளை வழங்கிவருவதாக மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் மருதபாண்டி ராமேஸ்வரன் தெறிவித்தார். ஹட்டன் கல்வி வலயத்த்திற்குட்பட்ட பொகவந்தலாவ சென்மேரிஸ்…

Read More

கட்டார் ரியால் பரிமாற்றம் தொடர்பில் மத்திய வங்கி விஷேட அறிவித்தல்

(UDHAYAM, COLOMBO) – கட்டார் ரியாலை ஏற்கவேண்டாம் என எந்தவொரு வங்கிக்கும் அறிவிக்கவில்லை இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதேவேளை, கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள வங்கிகள், கட்டார் ரியால் பரிமாற்றத்தை மீண்டும் ஆரம்பித்துள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். எனினும் குறிப்பிட்டளவு பணமே இவ்வாறு பரிமாற்ற வாய்ப்பாளிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் மேலும் தெரிவித்துள்ளார். இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள வங்கிகள், கட்டார் ரியாலை ஏற்க மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

மண்சரிவு அபாயம் நாவலபிட்டி கதிரேசன் மத்திய கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை தொண்டமான். மஹிந்தாந்த .வேலுகுமார் கல்லூரிக்கு உடனடி விஜயம்

(UDHAYAM, COLOMBO) – மண்சரிவு அபாயத்தினால் நாவலபிட்டி கதிரேசன் மத்திய  கல்லூரி மாணவர்களுக்கு எதிர்வரும் எதிர்வரும் 7 ம் திகதி புதன்கிழமை வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்லூரியின் அதிபர் டி.நாகராஜ் தெரிவித்தார் கடந்த 30 ம் திகதி கல்லூரியின் மூன்று மாடி கட்டிடப்பகுதியிலுள்ள பாதுகாப்பு மதில் கட்டடம் இடிந்து வீழ்ந்த நிலையில் கீழ் பகுதியில் அமைந்துள்ள வகுப்பரை கட்டடத்தின் தரம் 6.தரம் 7 வகுப்பறைகள் மூன்று சேதமாகியது மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் மேல் அமைந்துள்ள கல்லூரியின் மூன்று…

Read More

மத்திய வங்கி விதித்த தடையில் மாற்றம் இல்லை

(UDHAYAM, COLOMBO) – பெர்பச்சுவல் டிரசரிஸ் உள்ளிட்ட 3 நிறுவனங்கள் மீது மத்திய வங்கி விதித்திருந்த தடைக்கு எதிராக தாக்கல் செய்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

Read More

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அறிவித்தல்

(UDHAYAM, COLOMBO) – கடும் மழையுடனான காலநிலை காரணமாக, களு, நில், கிங் கங்கைகள் பெருக்கெடுத்துள்ளன. அத்துடன் களனி கங்கையும் பெருக்கெடுக்கும் நிலையை அடைந்துள்ளதாக, நீர்வழங்கல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தாழ்நிலப் பகுதி மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. அதேநேரம், மழை காரணமாக காலி, மாத்தறை, ரத்தினபுரி மற்றும் களுத்துறை ஆகிய பகுதிகளில் பல இடங்கள் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்டத்தில, பாதுக்க பிரதேசம் நீரில் மூழ்கி இருக்கிறது….

Read More

சிறிலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம்

(UDHAYAM, COLOMBO) – சிறிலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றிருந்தது. இதன்போது அரசியல் யாப்பு தொடர்பான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பில் பேசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை தொடர்பில் சுதந்திர கட்சியின் கருத்துக்களை முன்வைப்பதற்காக, அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தலைமையிலான குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த குழு சுதந்திர கட்சியின் பல்வேறு தரப்பினருடன் கலந்தாய்வு செய்து, இறுதி அறிக்கை ஒன்றை தயாரித்து வழங்கவிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

Read More