ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கும் அழைப்பாணை
(UDHAYAM, COLOMBO) – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவும் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று அழைப்பாணை பிறப்பித்துள்ளது. போலி ஆவணங்களை தயாரித்த குற்றச்சாட்டுக்கு அமைய ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்திநாயக்கவிற்கு எதிரான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. முறைப்பாட்டில் முதலாம் மற்றும் இரண்டாம் சாட்சியாளர்களாக பெயரிடப்பட்டுள்ளவர்கள், கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது எதிர்க் கட்சி தலைவராக இருந்த ரணில் விக்கிரமசிங்க…