இலங்கை மற்றும் செக்குடியரசுக்கிடையில் வர்த்தக நடவடிக்கைகளை மேம்படுத்தத்திட்டம்
(UTV|COLOMBO)-இலங்கை மற்றும் செக்குடியரசுக்கிடையில் சரித்திரம் முக்கியத்துவம் மிக்க புரிந்துணர்வு உடன்படிக்கை தொடர்பிலான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இரு நாடுகளுக்கிடையிலான பொருளாதார மற்றும் புரிந்துணர்வுகளுக்கான கூட்டுக்குழுவின் மூலமாக இருதரப்பு வர்த்தகம் முதலீடு பொருளாதார விடயங்களில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. அபிவிருத்தி மூலோபாய மற்றும் சர்வதேச வர்த்தகதுறை அமைச்சர் மலிக் சமரவிக்கிரம இந்த விடயங்களில் நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்கு திட்டமொன்றை வகுத்துள்ளார். அமைச்சர் மலிக் சமரவிக்கிரம செக்கோசிலோவாக்கியா வர்த்தகம் மற்றும் கைத்தொழில் அமைச்சர் மத்தியில் கடந்த 7ம் திகதி புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது…