மழையுடன் கூடிய காலநிலை
(UTV|COLOMBO)-நாட்டின் பெரும்பாலான இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கரையோரப் பகுதிகளில் காலை வேளையில் சிறிதளவு மழை பெய்யலாம். மேற்கு, சப்ரகமுவ, தெற்கு மற்றும் மத்திய மாகாணங்களில் சில பகுதிகளில் காலை வேளையில் பனிமூட்டம் எதிர்பார்க்கப்படுகிறது. இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக காற்று வீசக்கூடும். இடி மின்னலிலிருந்து பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது….