தேசிய சுரக்ஷா மாணவர் காப்புறுதி நிகழ்வு இன்று
(UTV|COLOMBO)-தேசத்தின் பிள்ளைகளை என்றும் பாதுகாப்போம் என்ற தொனிப் பொருளில் தேசிய சுரக்ஷா மாணவர் காப்புறுதித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. சுமார் 45 லட்சம் பாடசாலை மாணவர்களுக்கு காப்பீட்டு வசதிகளை வழங்கும் சுரக்ஷா காப்புறுதி தேசிய நிகழ்வு கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தலைமையில் நுகேகொட அனுலா வித்தியாலயத்தில் இடம்பெறவுள்ளது. இத்திட்டத்தின்மூலம் மாணவர் ஒருவர் வருடம் ஒன்றிற்கு ஆகக் கூடுதலாக இரண்டு லட்சம் ரூபா பெறுமதியான காப்பீட்டு வசதிகளை பெறுகின்றார். இதனை கல்வி அமைச்சும், காப்புறுதிக் கூட்டுத்தாபனமும் இணைந்து ஏற்பாடுசெய்துள்ளன….