மல்லாகத்தில் கடத்தப்பட்ட மாணவி, இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் விடுவிப்பு
(UDHAYAM, COLOMBO) – யாழ். மல்லாகம் பகுதியில் வைத்து ஹயஸ் வாகனத்தில் கடத்தப்பட்ட பாடசாலை மாணவி, இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார். தென்மராட்சி வரணிப் பகுதியில் வேனிலிருந்து தள்ளிவிடப்பட்ட நிலையில், பொதுமக்களால் மாணவி மீட்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். மல்லாகம் மகா வித்தியாலயத்தில் உயர்தரத்தில் கல்வி கற்கும் 18 வயது மாணவி, பாடசாலைக்கு நடந்த செல்லும் வழியில் இன்று காலை 7.30 மணியளவில் கடத்தப்பட்டுள்ளார். ஹயஸ் வாகனத்தில் வந்த அறுவர் கொண்ட குழுவினரால் மாணவி கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது….