பாதிக்கப்பட்ட களுத்துறை மாவட்டத்திற்கு ஜனாதிபதி விஜயம்
(UDHAYAM, COLOMBO) – வெள்ளம், மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்டகளுத்துறை மாவட்டத்தின் புலத்சிங்கள, யட்டகம்பிற்றிய, நாஹகதொல பிரதேசங்களுக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனகண்காணிப்பு விஜயத்தில் ஈடுபட்டிருந்தார். இன்று முற்பகல் மேற்கொண்ட இந்த விஜயத்;தின்போது சேதமடைந்த வீடுகள் மற்றும் காணிகளை ஜனாதிபதி பார்வையிட்டார். உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு சுற்றாடல் அமைச்சினால் அப்பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட சிரமதான நிகழ்விலும் ஜனாதிபதி கலந்துகொண்டார். இராணுவத்தினர் மற்றும் சீன உதவிக் குழுவின் பங்களிப்புடன் சிரமதான நிகழ்வு இடம்பெற்றது. பாஹியங்கல மலை மண்சரிவுக்குட்பட்டு நாஹகதொல கங்கையில்…