காலி மாவட்டத்தில் 12 பேர் உயிரிழப்பு
(UDHAYAM, COLOMBO) – காலி மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தினால் 12 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கடந்த சில தினங்களில் ஏற்பட்ட அதிக மழையுடன் கூடிய காலநிலையினால் காலி மாவட்டத்திலுள்ள 396 கிராம சேவகர் பிரிவிலுள்ள 38,155 குடும்பங்களைச் சேர்ந்த 151,360 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வனர்த்தத்தினால் காலி மாவட்டத்தில் 12 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதுடன், 10 பேர் காணாமல் போயுள்ளனர். இதுவரை வெள்ளப்பெருக்கினால் 161 வீடுகள்…