‘ஐட்டம் போய்’ என்று அழைத்ததால் நமீதா மீது கடுப்பான ஆரவ்

(UDHAYAM, COLOMBO) – பிக் பாஸ்நிகழ்ச்சியில் நேற்று பிரபல கவர்ச்சி நடிகை நமீதா மீது சக போட்டியாளரான ஆரவ் கோபத்தில் இருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கியது முதல் ஆரவ் மீது அனைவருக்கும் ஒரு பார்வை இருந்தது. இந்நிலையில் நடிகை ஓவியா ஆரவ்வை காதலிப்பது போல அவர் பின்னாடியே சுற்றியது நிகழ்ச்சியை பார்க்கும் பலரையும் ரசிக்க வைத்தது. ஆனால் ஆரவ், ஓவியாவின் காதல் வலையில் விழவில்லை. இந்த சூழலில் ஜல்லிக்கட்டு புகழ் ஜூலிக்கு நடிகர் ஆரவ் மீது…

Read More

வெனிசியுலாவின் உச்ச நீதிமன்றத்தின் மீது கிரனைட் தாக்குதல்

(UDHAYAM, COLOMBO) – வெனிசியுலாவின் உச்ச நீதிமன்றத்தின் மீது கிரனைட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. உலங்குவானூர்தி ஒன்றில் இருந்து இந்த குண்டு வீசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்துக்கு எதிரான காவற்துறை அதிகாரி ஒருவரே இந்த உலங்குவானூர்தியை கடத்தி தாக்குலை மேற்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. எனினும் தாக்குதல்தாரி குறித்த விபரங்கள் எவையும் வெளியாக்கப்படவில்லை. இந்த தாக்குதலை தீவிரவாதத் தாக்குதல் என்று அந்த நாட்டின் ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

Read More

யாழில் மர்ம கும்பலால் நபரொருவர் மீது கொடூரத் தாக்குதல்

(UDHAYAM, COLOMBO) – யாழ்ப்பாணம் – மானிப்பாய் பிரதேசத்தில் நேற்று இரவு கூரிய ஆயுதத்துடன் உந்துருளிகளில் வந்த சிலர், நபரொருவரை தாக்கி விட்டு தப்பிச் சென்றுள்ளனர். மானிப்பாய் – ஆனந்தன் வைரவர் ஆலய சந்தியில் நேற்று இரவு 8.00 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். தாக்குதலை மேற்கொண்ட தரப்பினர் 4 உந்துருளிகளில் வந்துள்ள நிலையில், மூன்று பேர், குறித்த நபர் மீது தாக்குதலை நடத்திய பின்னர் தப்பிச் சென்றுள்ளதாக யாழ்ப்பாண காவற்துறைக்கு தகவல்…

Read More

உந்துருளியில் வந்த இருவர் மாணவி மீது ஊசிய ஏற்றிய கொடூரம்…

(UDHAYAM, COLOMBO) – கந்தளாய் – பேரமடுவ பிரதேசத்தில் 10 வயது மாணவி மீது வீதியில் வைத்து ஊசி ஏற்றப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் காவற்துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. குறித்த மாணவி கடந்த 17 ஆம் திகதி மேலதிக வகுப்பொன்றுக்கு சென்று மீண்டும் வீடு திரும்பிய வேளை உந்துருளியில் பின்தொடர்ந்து வந்த இருவர் இவ்வாறு அவர் மீது ஊசியை ஏற்றிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது. உந்துளியில் வந்த இருவரும் மாணவியின் வலது கையின் தோற்பட்டையில் ஊசியை ஏற்றியுள்ளதாக காவற்துறை…

Read More

பள்ளிவாசல் மீது தற்கொலை குண்டுத்தாக்குதல் – 6 பேர் பலி

(UDHAYAM, COLOMBO) – காபுலின் மேற்கு பகுதியில் உள்ள சியா பள்ளிவாசல் ஒன்றின் மீது தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் ஆறு பேர் பலியாகினர். மேலும் பலர் காயமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நோன்பை முன்னிட்டு இடம்பெற்ற விசேட நிகழ்வொன்றின் போது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு இன்னும் எந்த அமைப்பும் உரிமைக் கோரவில்லை.

Read More

செய்தி சேகரிக்கசென்ற ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் – [IMAGES]

(UDHAYAM, COLOMBO) – ஹட்டன் கல்வி வலயம் சென்ஜோன்டிலரி தமிழ் வித்தியாலயத்தின் ஆங்கிளம் பாட ஆசிரியர் தரம் 10 கல்வி பயிலும் மாணவன் ஒருவனை கடந்த09.06.2017 தாக்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர்களும் பழையமாணவர்களும்  நடத்திய ஆர்பாட்டதை செய்தி சேகரிக்க சென்ற பிராந்திய ஊடகவியலாளர்களை பாடசாலையின் அதிபர் உட்பட ஆசிரியர்கள் தாக்கியமை தொடர்பினான விசாரணையை நோர்வூட் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர் அமரேசன் அனுசான் என்ற மாணவன் வழங்கப்பட மேலதிக பாடவேலையை  செய்யவில்லையென. ஆங்கிளம் பாட ஆசிரியர் தாக்கியதாக.          மா ணவனினால்…

Read More

இந்தியாவில் விவசாயிகள் மீது துப்பாக்கி சூடு: 6 பேர் பலி

(UDHAYAM, COLOMBO) – இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற விவசாயிகளின் போராட்டத்தின் போது 6 விவசாயிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு மண்ட்சோர் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடன்களில் இருந்து தங்களை விடுவிக்க வலியுறுத்தி, விவசாயிகளால் இந்த போராட்டம் நடத்தப்பட்டது. இதன்போது அங்கு ஏற்பட்ட வன்முறையைத் தொடர்ந்து, துப்பாக்கித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். எனினும் தாக்குதல் நடத்தியவர்கள் யாரென்று அடையாளம் காணப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

Read More

தங்கப்பதக்கம் வென்ற மாரியப்பனின் மீது பரபரப்பு புகார்!!

(UDHAYAM, COLOMBO) – ரியோ பரா – ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற மாரியப்பனின் காரில் மோதியதால், மிரட்டப்பட்டதாக கூறப்படும் இளைஞர் மர்மமான முறையில் இறந்துள்ளார். தமிழக செய்திகள் இதனைத் தெரிவித்துள்ளன. சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள பெரியவடகம்பட்டி கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி சதீஸ்குமார். இவர் நேற்று மதியம் பெரியவடகம்பட்டி மாரியம்மன் கோவில் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது மண் சறுக்கியதில், மோட்டார் சைக்கிளுடன் அருகில் இருந்த கார் மீது விழுந்துள்ளார். இதில், காரில் சேதம்…

Read More

பங்காளதேசம் மீது ‘மோரா’ புயல் தாக்கியுள்ளது

(UDHAYAM, COLOMBO) – வங்கக்கடலில் உருவான மோரா புயல் இன்று பங்காளதேசத்தை தாக்கியுள்ளது. இன்று காலை 6 மணியளவில் பங்கதேசத்தின் பிரபல துறைமுக நகரான சிட்டகாங் நகருக்கும் கோக்ஸ்நகருக்கும் இடையே  புயல் கரையைக் கடந்ததாக வங்கதேச வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்தது. புயல் கரையை கடக்கும் போது 117 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. கனமழையும் பெய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடந்ததையிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏற்கெனவே அதிகாரிகள் கரையோரப் பகுதிகளில் இருந்த 3 லட்சம் மக்களை…

Read More

பிலியந்தளை பொலிஸ் அதிகாரிகள் மீது தாக்குதல் – அறிக்கை சமர்ப்பிக்குமாறு அமைச்சர் சாகல ரட்நாயக்காபொலிஸ்மா அதிபருக்கு உத்தரவு

(UDHAYAM, COLOMBO) – பிலியந்தளை மொரட்டுவை வீதியில் அரச  வங்கிக்கு முன்னால் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகம் பற்றி அறிக்கை சமர்ப்பிக்குமாறு சட்டம் ஒழுங்கு தொடர்பான அமைச்சர் சாகல ரட்நாயக்க பொலிஸ்மா அதிபரை உத்தரவு பிறப்பித்துள்ளார். போதைப் பொருள் சுற்றிவளைப்பிற்காக சென்ற பொலிஸ் அதிகாரிகள் மீது தாக்குதப்பட்ட  இந்த சம்பவத்தில் ஒரு பொலிஸ் அதிகாரி உயிரிழந்துள்ளதோடு, மற்றுமொரு அதிகாரி காயமடைந்து அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூன்று நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்….

Read More