வழக்கினை மீளப்பெற்றுக் கொள்ளாவிட்டால் தேர்தலை பிற்போட நேரிடும்

(UTV|COLOMBO)-உள்ளுராட்சிமன்ற எல்லை நிர்ணயம் தொடர்பான வர்த்தமானி அறிவிப்புக்கு எதிரான மனுவை மீள பெற்றுக்கொள்ளாவிட்டால் உள்ளுராட்சி மன்ற தேர்தல்கள் மேலும் மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு பிற்போட நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல இதனை தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்சி தேர்தலுக்கு தயாராக இருக்கிறது. தற்போது வழக்கினை மீளப்பெற்றுக் கொள்ளாவிட்டால் தேர்தல் கட்டாயமாக பிற்போகும். ஐக்கிய தேசிய கட்சி இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றது. ஆனாலும் நீதிமன்றத்தை மீறிஎதுவும் செய்ய முடியாது என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.  …

Read More