அரச முகாமைத்துவ சேவையில் புதிதாக மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வருடத்தில் இணைப்பு

(UDHAYAM, COLOMBO) – அரச முகாமைத்துவ சேவையில் இந்த வருடத்தில் புதிதாக மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். எதிர்வரும் 22ம் 23ம் திகதிகளில் இதற்கான போட்டிப் பரீட்சை நடத்தப்படவிருப்பதாக அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதேவேளை இதற்காக ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர். அனைத்து பரீட்சார்த்திகளுக்குமான பரீட்சை அனுமதி அட்டை தற்பொழுது அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஜயந்த புஷ்பகுமார தெரிவித்தார். இரண்டு மாத காலப்பகுதிக்குள் இதற்கு நேர்முகப் பரீட்சை நடத்தப்பட்டு…

Read More

ஜனாதிபதி தலைமையில் இன்று இடர் முகாமைத்துவ தேசிய குழுக்கூட்டம்

(UDHAYAM, COLOMBO) – ஜனாதிபதி தலைமையில் இடர் முகாமைத்துவ தேசிய குழுக்கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. சமீபத்திய இடர் நிலைமைகளால் சேதமடைந்த வீடுகள் பற்றி மாவட்ட மற்றும் பிரதேச மட்டத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. ஆய்வின் விபரங்கள் இன்றைய கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அவற்றின் அடிப்படையில் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. தீர்மானங்களின் பிரகாரம் அடுத்தகட்ட நடவடிக்கைகள் அமுலாகும் என்று தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் லக்விஜய சாகர பலன்சூரிய தெரிவித்தார். தேசிய வீடமைப்புத் தினத்தை முன்னிட்டு இடர் முகாமைத்துவ மற்றும் சுத்திகரிப்பு…

Read More

சீரற்ற காலநிலை காரணமாக அரச முகாமைத்துவ உதவி சேவை பரீட்சை பிற்போடல்

(UDHAYAM, COLOMBO) – சீரற்ற காலநிலை காரணமாக எதிர்வரும் 27 ஆம் மற்றும் 28 ஆம் திகதிகளில் இடம்பெறவிருந்த அரச முகாமைத்துவ உதவி சேவையின் 3 ஆம் தரத்துக்கான ஆட்சேர்ப்புக்கான மட்டுப்படுத்தப்பட்ட மற்றும் திறந்த போட்டிப்பரீட்சை பிற்போடப்பட்டுள்ளது. பரீட்சைகள் திணைக்களம் அறிக்கையொன்றினூடாக இந்த அறிவிப்பை விடுத்துள்ளது. பிற்போடப்பட்ட குறித்த பரீட்சைகள் மீண்டும் நடைபெறும் திகதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும், தற்போது வழங்கப்பட்டுள்ள அனுமதிப் பத்திரங்கள் இரத்துச் செய்யப்படும் என்றும் பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Read More

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அறிவித்தல்

(UDHAYAM, COLOMBO) – கடும் மழையுடனான காலநிலை காரணமாக, களு, நில், கிங் கங்கைகள் பெருக்கெடுத்துள்ளன. அத்துடன் களனி கங்கையும் பெருக்கெடுக்கும் நிலையை அடைந்துள்ளதாக, நீர்வழங்கல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தாழ்நிலப் பகுதி மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. அதேநேரம், மழை காரணமாக காலி, மாத்தறை, ரத்தினபுரி மற்றும் களுத்துறை ஆகிய பகுதிகளில் பல இடங்கள் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்டத்தில, பாதுக்க பிரதேசம் நீரில் மூழ்கி இருக்கிறது….

Read More

கழிவு முகாமைத்துவ தேசிய கொள்கையை தயாரிப்பதற்கான யோசனைகளை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு உத்தரவு

(UDHAYAM, COLOMBO) – கழிவு முகாமைத்துவம் தொடர்பான தேசிய கொள்கையை தயாரிப்பதற்கான யோசனைகளை சமர்ப்பிக்குமாறு  ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அமைச்சுக்களுக்கும், உள்ளுராட்சி மன்றங்களுக்கும் பணிப்புரை வழங்கியுள்ளார். உள்ளுராட்சி மன்றங்களின் ஆணையாளர் உட்பட அரச அதிகாரிகளுடன் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி இதற்கான உத்தரவை பிறப்பித்தார். கழிவு முகாமைத்துவத்தின் போது உள்ளுராட்சி மன்றங்கள் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகள், அது தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய தீர்வுகள் உட்பட பல விடயங்கள் பற்றி இதன் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இது…

Read More