இன்று முதல் அனுமதி

(UTV | கொழும்பு) – சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய, மத வழிபாட்டிடங்களில் வழிபாடுகளை மேற்கொள்ள, இன்று (12) முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று மாதகாலமாக  மத வழிபாட்டிடங்களில்  மக்கள் ஒன்றுகூடுவதற்கு அரசாங்கம் தடை விதித்திருந்தது. இந்நிலையில், மேற்படி தடை தளர்த்தப்பட்டுள்ளதுடன், சுகாதார வழிமுறைகளுக்கமைய மத வழிபாடுகளில் ஈடுபடுமாறு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதற்கமைய, மத வழிபாட்டிடங்களில் ஒன்றுகூடுவோரின் எண்ணிக்கை 50 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

Read More

முதல் உலகப்போரில் மாயமான ஆஸ்திரேலிய நீர்மூழ்கி கப்பல் 103 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிப்பு

(UTV|COLOMBO)-முதல் உலகப்போரின் போது ஆஸ்திரேலியா கடற்படைக்கு சொந்தமான ‘எச்.எம்.ஏ.எஸ். ஏஇ-1’ என்ற நீர்மூழ்கி கப்பல் இடம் பெற்றது. அக்கப்பல் பப்புவா நியூகினியா கடல் பகுதியில் கடந்த 1914-ம் ஆண்டு திடீரென மாயமானது. அதில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து கடற்படை வீரர்கள் 35 பேர் இருந்தனர். அந்த கப்பலை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இக்கப்பலின் உடைந்த பாகங்கள் பப்புவா நியூ கினியாவில் பார்க் தீவுகள் பகுதியில் கடலில் கண்டு பிடிக்கப்பட்டது. நீருக்குள் மூழ்கி…

Read More

கொழும்பு கோட்டை – தலைமன்னார் தொடரூந்து சேவைகள் இன்று முதல் மட்டு!

(UDHAYAM, COLOMBO) – கொழும்பு கோட்டையில் இருந்து தலைமன்னார் வரையிலான தொடரூந்து சேவைகள் இன்று முதல் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கமைய குறித்த சேவைகள் மதவாச்சி வரையில் மாத்திரமே இடம்பெறும் என தொடரூந்து கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. குறித்த தொடரூந்து வீதியில் மதவாச்சி மற்றும் செட்டிக்குளத்திற்கு இடையில் மேற்கொள்ளப்படும் திருத்தப்பணிகளின் நிமிர்த்தமே இவ்வாறு தொடரூந்து சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

Read More

வித்தியாவின் படுகொலை வழக்கு, ‘விசாரணை மன்று’ அடிப்படையில் இன்று முதல்

(UDHAYAM, COLOMBO) – பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலைசெய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி வித்தியாவின் வழக்கு, ‘விசாரணை மன்று’ அடிப்படையில் இன்று முதல் யாழ்ப்பாண மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. நீதிபதி பாலேந்திரன் சசிமஹேந்திரன் தலைமையிலான மூன்று பேர் கொண்ட இந்த விசாரணை மன்றில், நீதிபதிகளாக அன்னலிங்கம் ப்ரேம்சங்கர் மற்றும் மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோரும் உள்ளடக்கப்பட்டுள்ளனர். கடந்த மே மாதம் 22ம் திகதி பிரதம நீதியரசர் பிரியசாத் டெப்பினால் இந்த விசாரணை மன்று நியமிக்கப்பட்டது. கடந்த 2015ம்…

Read More

நாளை முதல் விசேட டெங்கு வேலைத்திட்டம்

(UDHAYAM, COLOMBO) – டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்காக நாளை முதல் இரண்டு வார காலத்திற்கு பொது மக்களின் பங்களிப்புடன் விசேட வேலைத் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த சுகாதார அமைச்சு தயாராகியுள்ளது. மழையுடன் கூடிய காலநிலையில் டெங்கை கட்டுப்படுத்துவது இதன் நோக்கமாகும். இதுவரை 70 ஆயிரம் டெங்கு நோயாளர்கள் இனம் காணப்படடுள்ளனர். அவர்களில் 25 சதவீதமானோர் 19 வயதுக்கு கீழானவர்கள் என்று டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

Read More

தொடரூந்து சாரதிகள் இன்று நள்ளிரவு முதல் தொழிற்சங்க நடவடிக்கையில்

(UDHAYAM, COLOMBO) – பல கோரிக்கைகளை முன்வைத்து தொடரூந்து சாரதிகள் மற்றும் தொடரூந்து கட்டுப்பாட்டாளர்கள் இன்று நள்ளிரவு முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர். ஆட்சேர்ப்பு, பதவி உயர்வு மற்றும் வேதன பிரச்சினை உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்க நிர்வாக அதிகாரி நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. இதன் காரணமாகவே, இவ்வாறு தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ள தீர்மானித்ததாக தொடரூந்து சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட குறிப்பிட்டார். பிரச்சினை தொடர்பில் அண்மையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. எனினும், அப்போது தங்களுக்கு வழங்கப்பட்ட உறுதி…

Read More

களனி பல்கலைக்கழகம் இன்று முதல் ஒரு வாரம் மூடல்

(UDHAYAM, COLOMBO) – களனி பல்கலைக்கழகம் இன்று நண்பகல் 12.00 மணியுடன் ஒரு வாரம் மூடுவதற்கு பல்கலைக்கழக நிர்வாக அதிகாரி தீர்மானித்துள்ளார். அந்த பல்கலைக்கழகத்தினுள் பரவி வரும் மர்ம காய்ச்சல் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பல்கலைக்கழத்தின் அனைத்து பீடங்களும் இவ்வாறு மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை பல்கலைக்கழகத்தில் கல்வி நடவடிக்கைள் இடம்பெறும் நிலையில், விடுதிகளில் தங்கியுள்ள அனைத்து மாணவர்களையும் இன்று நண்பகல் 12.00 மணியுடன் வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More

ஜனவரி முதல் மே மாதம் வரை 1104 வீதி விபத்துக்கள்

(UDHAYAM, COLOMBO) – கடந்த ஜனவரி மாதம் 1ம் திகதி முதல் மே மாதம் 31ம் திகதி வரை 1104 வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன. இதனால் 1161 பேர் உயிரிழந்துள்ளதாக வீதி பாதுகாப்புதொடர்பான தேசிய பேரவை அறிவித்துள்ளது. இதில் 349 பேர் பாதசாரிகளாவர். இதில் 441பேர் சைக்கிள் உரிமையாளர்கள் என்றும் தெரியவந்துள்ளது. மேலும் , மேல் மாகாணத்தில் கூடுதலான வாகன விபத்துக்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

புனித ரமழான் நோன்பு நாள் இன்று முதல் ஆரம்பம்

(UDHAYAM, COLOMBO) – புனித ரமழான் நோன்பு நாள் இன்று முதல் ஆரம்பமாகியுள்ளது. நாட்டின் பல பாகங்களில் ஹிஜ்ரி 1438 ஆம் ஆண்டிற்கான புனித ரமழான் தலைப் பிறை நேற்று தென்பட்டதை அடுத்து புனித ரமழான் முதல் நோன்பு இன்று முதல் ஆரம்பிப்பதாக கொழும்பு பெரிய பள்ளிவாசலின் பிறைக்குழுவின் பிரதித் தலைவர் அப்துல் ஹமீட் பஃஜி, நேற்று அறிவித்தார்.

Read More

புனித ரமழான் முதல் நோன்பு நாள் நாளை அதிகாலையில் இருந்து ஆரம்பம்

(UDHAYAM, COLOMBO) – ஹிஜ்ரி 1438 புனித ரமழான் மாதத்திற்கான தலைப் பிறை பார்க்கும் மாநாடு தற்போது கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன. கொழும்பு பெரிய பள்ளி வாசலின் ஏற்பாட்டில் அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமாவின் பிறைக் குழுவின் வழி நடத்தலில் அதன் தலைவர் மௌலவி றியாழ் தலைமையில் இடம் பெறும். இந்த நிகழ்வில் அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபையின் பிரதிநிதிகள், சகல பள்ளிவாசல்கள், தரீக்காக்கள், ஷாவியாக்களின் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து…

Read More