தொடர்ச்சியான கைது அதிருப்தியளிக்கிறது – தமிழக முதல்வர்

(UDHAYAM, COLOMBO) – இந்திய மீனவர்கள் தொடர்ச்சியாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுகின்றமை அதிருப்தியளிப்பதாகவும், அது இலங்கையின் வழக்கமாக மாறிவிட்டதாகவும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் அனுப்பியுள்ள கடிதம் ஒன்றில் இதனை அவர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 3 கடற்றொழிலாளர்கள் கடந்த சனிக்கிழமை இலங்கை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டனர். இதன்படி தற்போது 53 இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். தமது நாட்டு கடற்றொழிலாளர்களை கைது…

Read More

சட்டமூல பிரேரணை விலக்கிக்கொள்ளப்படவில்லை – சபை முதல்வர் அறிவிப்பு

(UDHAYAM, COLOMBO) – பலவந்தமான முறையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பாதுகாப்புக்கான சர்வதேச ஒப்பந்தம் குறித்த சட்டமூல பிரேரணை விலக்கி கொள்ளப்படவில்லை. இன்றைய பாராளுமன்ற அமர்வின் போது சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல இந்த விடயத்தை தெரிவித்தார். இந்த சட்டமூலம் தொடர்பான பிரேரணை பாராளுமன்றத்திலிருந்து விலக்கிக்கொள்ளப்பட்டதாக இன்று வெளியான தேசிய பத்திரிக்கையொன்றில் வெளியிடப்பட்டுள்ளது. இது தொhட்ர்பாகவே அமைச்சர் சுட்டிக்காட்னார். இது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படாவிட்டாலும் சபை ஒழுங்கு பத்திரத்தில் இடம்பெற்றிருப்பதாகவும் அமைச்சர் இதனை தெரிவித்தார்.

Read More

கச்சத்தீவை மீளப்பெறுவதே பிரச்சினைக்கு தீர்வு – தமிழக முதல்வர்

(UDHAYAM, COLOMBO) – இலங்கையின் வசம் உள்ள கச்சத்தீவை மீளப்பெறுவதன் மூலமே இந்திய கடற்றொழிலாளர்களின் பிரச்சினைக்கு தீர்வைக்காண முடியும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். அவர் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பியுள்ள கடிதம் ஒன்றில் இந்த விடயத்தைக் கூறியுள்ளார். இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி அவர் இந்த கடிதத்தை அனுப்பியுள்ளார். இது தொடர்பில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஊடாக தேவையான நடவடிக்கைளை எடுக்குமாறு பழனிச்சாமி, இந்திய பிரதமரை…

Read More

குருகுலராஜா ராஜினாமா கடிதத்தை அனுப்பியதாக வடக்கு முதல்வர்..

(UDHAYAM, COLOMBO) – வட மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்ரன் தெரிவித்துள்ளார். தொலைபேசி ஊடாக அவர் இதனைக் கூறியதாக யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். எனினும் அந்த கடிதம் தனக்கு இன்னும் கிடைக்கப்பெறவில்லை என அவர் இதன்போது மேலும் குறிப்பிட்டுள்ளார். மாகாண அமைச்சர்களின் ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவின் தீர்மானத்திற்கு அமைய மாகாண சபை கல்வி…

Read More

கிழக்கின் தொண்டராசிரியர்களுக்கான தீர்வு துரிதப்படுத்தப்பட வேண்டும் – பிரதமரிடம் கிழக்கு முதல்வர் கோரிக்கை

(UDHAYAM, COLOMBO) – கிழக்கு மாகாணத்திலுள்ள தொண்டராசிரியர்களுக்கான தீர்வு துரிதப்படுத்தப்பட வேண்டும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஷீர் அஹமட் கோரிக்கை விடுத்துள்ளார். அலரிமாளிகையில் இன்று பிரதமரை சந்தித்தபோதே அவர் இந்தக் கோரிக்கையை விடுத்தள்ளார். கிழக்கு மாகாணத்தில் உள்ள 445 தொண்டராசியர்களுக்கும் உடன் நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரியுள்ளார். இதையடுத்து தொண்டராசியர்களுக்கு தீர்வினை வழங்கும் நடவடிக்கையில் கல்வியமைச்சையும் இணைத்துக்கொண்டு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கிழக்கு முதலமைச்சருக்கு பிரதமர் அறிவுறுத்தல்…

Read More

82 வயதில் சிறையிலிருந்தே 12-ம் வகுப்புத் தேர்ச்சி பெற்ற ஹரியானா முன்னாள் முதல்வர்

(UDHAYAM, COLOMBO) – ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் இந்திய ஹரியானா மாநில முன்னாள் முதல் அமைச்சர் ஓம்பிரகாஸ் சௌடாலா, தமது 82வயதில் இந்தியாவின் 12-ம் வகுப்பு பரீட்சை எழுதி அதில் சித்தியடைந்துள்ளார். இவர் ஹரியானாவில் நான்கு தடவைகள் முதல் அமைச்சராக பணியாற்றினர். இந்தக்காலப்பகுதியில் ஆசிரியர் நியமனங்களில் தகுதியுள்ளவர்களுக்கு தொழில் வழங்காமல், பணத்துக்காக தகுதியற்றவர்களுக்கு தொழில்களை வழங்கிய குற்றச்சாட்டு அவர் மீது சுமத்தப்பட்டது. இந்தக்குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டநிலையில் அவரும் 54 பேருக்கும் தண்டனை வழங்கப்பட்டது. இதனையடுத்து அவர்…

Read More

தமிழக மீனவர்களது பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் – தமிழக முதல்வர்

(UDHAYAM, COLOMBO) – இலங்கை – இந்திய கடற்பரப்பில் தமிழக மீனவர்களது பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்று, தமிழக முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார். சென்னையில் இடம்பெற்ற கடற்படை நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார். தாக்கப்படுதல் போன்ற விடயங்களில் இருந்து தமிழக மீனவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும். இதற்கு தமிழக அரசாங்கம், கடற்படையினருக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கும் என்று அவர் கூறியுள்ளார்.

Read More