அனைத்து அரச ஊழியர்களும் அபிவிருத்தியின் முன்னோடிகளாக மாற வேண்டும் – ஜனாதிபதி
(UDHAYAM, COLOMBO) – அனைத்து அரச ஊழியர்களும் அடுத்துவரும் ஆண்டுகளில் அபிவிருத்தியின் முன்னோடிகளாக செயல்பட வேண்டும் என்று ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். கொழும்பு தாமரைத் தடாக அரங்கில் நேற்று இடம்பெற்ற ஜனாதிபதி செயலக பணிக்குழுவினருடனான சந்திப்பில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார். நாட்டின் அபிவிருத்தி திட்டங்களுக்கு ஒத்துழைக்க வேண்டியது அரச ஊழியர்களின் பொறுப்பாகும். அந்த அபிவிருத்தி திட்டங்களை நெறிப்படுத்தும் நிலையம் ஜனாதிபதி செயலகமே ஆகும். அதன்போது உற்பத்திதிறன் கூடிய நிறுவனமாக ஜனாதிபதி செயலகத்தை…