மேலும் ஒரு குற்றச்சாட்டை முன்வைத்துள்ள மீதொட்டமுல்ல மக்கள்
(UDHAYAM, COLOMBO) – மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிவால் வீடுகளை இழந்தவர்கள், தமக்கு அரசாங்க வழங்கிய மதிப்பீட்டின் இழப்பு போதாது என குற்றம்சாட்டியுள்ளனர். கடந்த ஏப்பிரல் மாதம் 14 ஆம் திகதி மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிவால் 40 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 98 வீடுகள் முற்றாக சேதமடைந்தன. எனினும் அதிகாரிகளால் உரிய முறையில் சொத்துக்கள் மதிப்பிடப்படவில்லை என அந்த மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.