வடமாகாண ஆளுநர் தலைமையில் முல்லைத்தீவு காணிப்பிரச்சினை தொடர்பில் ஆராயும் கூட்டம்

UTV | COLOMBO – முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலவும் காணிப்பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் கூட்டம் ஒன்று மாவட்ட செயலத்தில் நேற்று இடம்பெற்றது. வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தலைமையில் இந்த கூட்டம் இடம்பெற்றது. இதில் முல்லைத்தீவு மாவட்டத்தில் இருபது காணி முறைப்பாட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் 12 பேர் விசாரணைக்கு சமூகமளித்திருந்ததாக எமது செய்தி தொடர்பாளர் சண்முகம் தவசீலன் தெரிவித்துள்ளார். இதில் 7 பேரின் காணிப்பிணக்குகள் தீர்த்து வைக்கப்பட்டுள்ளன. இதுதவிர, 22 பேர் புதிதாக தங்களது காணி…

Read More

முல்லைத்தீவு மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்களது பணிப்புறக்கணிப்பு தொடர்கிறது

UTV | COLOMBO – முல்லைத்தீவு மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்களது பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்றும் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் சற்குணராசா இதனைத் தெரிவித்துள்ளார். வடமாகாண வீதி அனுமதி பத்திரம் வழங்குதில் தாங்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்து இந்த போராட்டம் இடம்பெறுகிறது.

Read More

முல்லைத்தீவு, மாந்தை கிழக்கு பிரதேச சபை மக்கள் காங்கிரஸ் வசம்!

(UTV|COLOMBO)-முல்லைத்தீவு மாவட்டத்தில், மாந்தை கிழக்கு (பாண்டியன் குளம்) பிரதேச சபையை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தவிசாளராக போட்டியிட்ட மகாலிங்கம் தயானந்தன் (நந்தன்) 07 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார். இவருக்கு ஆதரவாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் 04 வாக்குகளும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 02 வாக்குகளும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் 01 வாக்கும் கிடைக்கப் பெற்றன. இவரை எதிர்த்துப் போட்டியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த சி.செந்தூரன்…

Read More

முல்லைத்தீவு மாவட்டத்தின் குடிநீர்ப் பிரச்சினைக்கு தீர்வு

(UTV|MULLAITIVU)-முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மக்களின் குடிநீர்ப் பிரச்சினைக்கு தீர்வாக, இராணுத்தினர் அவர்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளனர். விஷேடமாக முல்லைத்தீவு பிரதேசத்தில் புதிதாக குடியமர்த்தப்பட்டவர்களை இலக்காகக் கொண்டு முல்லைத்தீவு இராணுவ முகாமிற்கு முன்னாள், இக்குடிநீர் மையம் அமைக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஆர்.டபிள்யூ.டபிள்யூ.ஏ.டீ.பீ ராஜகுருவின் வழிகாட்டலின் கீழ் இந்த வேலைத்திட்டம் மேற்கொள்ளப்பட்டதோடு, பிரதேசத்தில் உள்ள மக்களுக்கு ஆறுதலலிப்பதாக இத்திட்டம் அமைந்துள்ளது. [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது…

Read More

முல்லைத்தீவு தேராவில் பகுதியில் ஒருதொகுதி வாக்காளர் அட்டைகள் மீட்பு

(UTV|MULLAITIVU)-முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட தேராவில் பகுதியில் ஒருதொகுதி வாக்காளர் அட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன   நடைபெறவுள்ள உள்ளூராட்சி  மன்ற  தேர்தலில்  வாக்களிக்கவுள்ள வாக்காளர்களுக்கு விநியோகிக்கவேண்டிய ஒருதொகுதி வாக்குச்சீட்டுக்களே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது   இது குறித்து மேலும் தெரியவருவதாவது   குறித்த பகுதியில் தபால் ஊழியர் இல்லாத காரணத்தால் வழக்கமாக கிராம வாசி ஒருவரிடம் கடிதங்களை வழங்கியே மக்களுக்கு விநியோகிப்பதனை  வழக்கமாக கொண்டிருந்த தபால் ஊழியரும் குறித்த பகுதிக்கான  வாக்காளர் அட்டைகளையும் கிராம வாசி ஒருவரிடம்…

Read More

இராணுவத்தினர் முல்லைத்தீவு வைத்தியசாலைக்கு இரத்த தானம்

(UDHAYAM, COLOMBO) – முல்லைத்தீவு மாவட்ட வைத்திய அதிகாரிகளினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கமைய முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அண்மையில் இடம்பெற்ற இரத்த தான நிகழ்வில் சுமார் 350 பேர் ஈடுபட்டனர். முல்லைத்தீவு இரத்த வங்கியின் இரத்த இருப்பு அளவினை மீள்நிரப்பும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்திலிருந்து 59, 64, 68 படைப் பிரிவினர் மற்றும் முல்லைத்தீவு முன் பராமரிப்பு பிரிவு மற்றும் ஏனைய படையணியின் இராணுவ வீரர்களும் இரத்ததானம் செய்துள்ளனர்.

Read More

முல்லைத்தீவு வவுனியா மாவட்டங்களில் மழை

(UDHAYAM, COLOMBO) – நாட்டின் பல பகுதிகளில் இன்று மழை பெய்யக் கூடும். வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை 5.30க்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் கிழக்கு, ஊவா மற்றும் வட மத்திய மாகாணங்களிலும், முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் இன்று பிற்பகல் 2மணிக்குப்பின்னர்  மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எதிர்வு கூறியுள்ளது மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. தெற்கு மாகாணத்தில் …

Read More