மூன்று நாட்களாக ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்ற அமர்வுகள் மீண்டும் ஆரம்பம்
(UTV|COLOMBO)-தொடர்சியாக மூன்று நாட்களாக முன்கூட்டியே ஒத்திவைக்கப்பட்ட இந்த வாரத்தின் நாடாளுமன்ற அமர்வுகள் தற்சமயம் மீண்டும் ஆரம்பமாகியுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை ஆரம்பமான இந்த வாரத்திற்கான அமர்வு அன்றைய தினம் எதிர்கட்சி தலைவர் பதவி தொடர்பில் ஒன்றிணைந்த எதிர்கட்சியினர் அமைதியின்மையை தோற்றுவித்தமையினால் சபை அமர்வு பிற்போடப்பட்டது. நேற்று முன்தினம் புதன் கிழமை சபை அமர்வில் ஒத்தி வைப்பு வேளை பிரேரணையை முன்வைக்கவிருந்த ஜே.வி.யின் உறுப்பினர் நிஹால் கலப்பதி சபையில் பிரசன்னமாகாமை மற்றும் எதிர்கட்சி பேச்சாளர்கள் இன்மை ஆகிய காரணங்களால் நேற்று…