புதிய தீவிரவாத முறியடிப்பு சட்ட மூலம் உருவாக்கப்பட்டு வருகின்றது

(UDHAYAM, COLOMBO) – பூகோளரீதியாக எழுந்துள்ள தீவிரவாத அச்சுறுத்தல்களுக்கு முகம் கொடுக்கும் வகையிலேயே, புதிய தீவிரவாத முறியடிப்பு சட்ட மூலம் உருவாக்கப்பட்டு வருவதாக, சட்டம் மற்றும் ஒழுங்குகள் அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் ஆரம்பமான எட்டாவது தென்னாசிய நாடுகளின் உள்துறை அமைச்சர்களின் மாநாட்டில் உரையாற்றும் போது அவர் இதனைக் கூறியுள்ளார். தற்போதுள்ள பயங்கரவாத தடை சட்டத்தை நீக்கி, புதிய தீவிரவாத முறியடிப்பு சட்ட மூலத்தை அமுலாக்க அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது. ஆனால், தீவிரவாத முறியடிப்பு சட்ட…

Read More

திக்வெல்ல “டில்ஸ்கூப்” ஷாட் மூலம் பெற்ற நான்கு ஓட்டம்!

(UDHAYAM, COLOMBO) – வெற்றியாளர் கிண்ணப்போட்டியின் இன்றைய தீர்மானமிக்க போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. நாயண சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பை தேர்ந்தெடுத்த நிலையில் , முதலில் துடுப்பெடுத்தாடிவரும் இலங்கை அணி சற்று முன்னர் வரை 7 விக்கட் இழப்பிற்கு 174 ஓட்டங்களை பெற்றுள்ளது. இன்றைய போட்டியில் இலங்கை அணியின் நிரோஷன் திக்வெல்ல சிறப்பாக ஆடி 73 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். அவர் இன்றைய போட்டியில் டி.எம் டில்ஷானை நினைவு படுத்தம்…

Read More

இலங்கையில் வெளிநாட்டு நாணயங்கள் மூலம் டொலர்களை வைப்பு செய்யும் சட்டத்தில் திருத்தம்

(UDHAYAM, COLOMBO) – வெளிநாட்டவர்கள், இலங்கையில் வெளிநாட்டு நாணயங்கள் மூலம் டொலர்களை வைப்பு செய்யும் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கமைய, வெளிநாட்டவர்கள் வெளிநாட்டு நாணயங்களின் மூலம் 500,000 டொலர்களை வைப்பு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வைப்பு கணக்குக்கு சிறப்பு வைப்பு கணக்கு என்று பெயரிடப்பட்டுள்ளது இது வர்த்தமானியிலும் பிரசுரிக்கப்பட்டுள்ளது அமரிக்க டொலர், பௌன்ட்ஸ்,சுவிஸ் பிராங், அவுஸ்திரேலிய டொலர், சிங்கப்பூர் டொலர், ஜப்பானிய யென், கனேடிய டொலர் போன்ற நாணயங்களில் இந்தக்கணக்குகளை திறக்கமுடியும். ஏனைய…

Read More

வெள்ள அனர்த்தத்தில் பாதிப்புற்றோருக்கு சதொச மூலம் அத்தியாவசிய பொருட்கள்

(UDHAYAM, COLOMBO) – அரச அதிபர், பிரதேச செயலாளர்களுக்கு அமைச்சர் ரிஷாட் அறிவுறுத்தல் நாட்டின் பல பாகங்களிலும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சதொச கிளைகள் மூலமும், சதொச களஞ்சியச்சாலைகள் மூலமும் அத்தியாவசியப் பொருட்களையும், ஏனைய உலர் உணவுப் பொருட்களையும் விநியோகிப்பதற்கு கைத்தொழில், மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவசர நடவடிக்கை எடுத்துள்ளார். இது தொடபில் அந்தந்த பிரதேசங்களிலுள்ள அரசாங்க அதிபர்களுக்கும், பிரதேச செயலாளர்களுக்கும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஆலோசனைகளையும், அறிவுறுத்தல்களையும் வழங்கி உள்ளார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு…

Read More

சுதந்திர ஆணைக்குழுவின் மூலம் உயர்தரத்திலான ஊடகசெயற்பாடு – பிரதி அமைச்சர் பரணவிதான

(UDHAYAM, COLOMBO) – சுதந்திர ஊடக ஆணைக்குழுவின் ஊடாக இலங்கையில் உயர்தரமான ஊடக செயற்பாடுகள் இடம்பெறும் என்று பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை பிரதியமைச்சர் கருணாரத்ன பரணவிதான தெரிவித்துள்ளார். ஜகத்தாவில் இன்று நடைபெற்ற ஊடக சுதந்திரம் தொடர்பான மாநாட்டில் பிரதியமைச்சர் உரையாற்றினார். அரசாங்கம் ஊடகவியலாளர் பாதுகாப்பு தொடர்பில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது. அத்தோடு ஊடகவியலாளர்களுக்கெதிரான பாதகமான செயற்பாடுகளை முடிவுக்கு கொண்டுவருவதற்கும் அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு மற்றும் சகிப்புத்தன்மை தொடர்பான குழுநிலை கூட்டத்தில் அமைச்சர் உரையாற்றினார்…

Read More

ஜீ.எஸ்.பி பிளஸ் வர்த்தக சலுகையினை பெறுவதன் மூலம் ஏற்றுமதி துறையின் போட்டித் தன்மையினை மேம்படுத்த முடியும்

(UDHAYAM, COLOMBO) – ஜீ.எஸ்.பி பிளஸ் வர்த்தக சலுகையினை ஐரோப்பிய ஒன்றியத்திடம் இருந்து பெறுவதன் மூலம் ஏற்றுமதி துறையின் போட்டித் தன்மையினை மேம்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீட்டினை செய்வதற்கு ஏற்ற வாய்ப்பினை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னெடுத்துச் செல்லப்படும் வர்த்தக சீர்த்திருத்தங்களை அமுல்ப்படுத்த சம்பந்தப்பட்டவர்கள் ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக அதிகாரி தெரிவித்துள்ளார். இந்த நிலையில் ஜி.எஸ்.பி பிளஸ் வர்த்தக சலுகையினை பெறுவதன் மூலம்…

Read More