மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவு திறப்பு

(UTV|COLOMBO)-மலையகத்தில் இன்று காலை முதல் பெய்து வரும் அடைமழை காரணமாக மேல் கொத்மலை மின்சார சபைக்கு நீரேந்தும் பகுதியில் ஆற்று நீரின் மட்டம் உயர்வடைந்துள்ளது. இதனால், மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவு ஒன்று  திறந்து விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்காரணமாக நீர்த்தேக்கத்தின் தாழ் நிலப்பகுதிகளில் வாழும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Read More

கீதாவின் பாராளுமன்ற உறுப்புரிமையை ரத்து செய்து மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உயர்நீதிமன்றம் இடைநிறுத்தம் செய்தது

(UDHAYAM, COLOMBO) – பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ரத்துச்செய்து வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்வரும் 15ம் திகதி வரை இடைநிறுத்தம் செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த தீர்ப்பிற்கு எதிராக கீதா குமார சிங்க தாக்கல் செய்த மனு இன்று உயர்நீதிமன்றத்தில் மூவரடங்கிய நீதவான் குழு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதேபோல் , அவர் தாக்கல் செய்த மனுவை எதிர்வரும் 15ம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது….

Read More

ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கும் கொழும்பு மேல் நீதிமன்றம் அழைப்பாணை

(UDHAYAM, COLOMBO) – எதிர்வரும் ஜூலை மாதம் 17 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு இன்று அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி விக்கும் களுஆராச்சி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது பொது வேட்பாளராக களமிறங்கிய மைத்திரிபால சிறிசேன மற்றும் அப்போது எதிர்க் கட்சி தலைவராக இருந்த ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின்கை யொப்பங்களை…

Read More

தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் கூரை மேல் ஏறி உண்ணாவிரத போராட்டம்!

(UDHAYAM, COLOMBO) – தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதான தொழிலாளர்கள் சிலர் தற்போதைய நிலையில் மைதானத்தின் கூரைக்கு மேல் ஏறி உண்ணாவிரத போராட்டமொன்றில் ஈடுபட்டுள்ளனர். ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் 11 தொழிலாளர்கள் இந்த உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டுள்ள நிலையில் , 10 வருடமாக தொழில் புரியும் எமக்கு இதுவரை நிரந்தர நியமனம் வழங்க இலங்கை கிரிக்கட் நிறுவனம் நடவடிக்கை எடுக்க வில்லை என தெரிவித்து இந்த உண்ணாவிர போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. தமது சேவையினை நிரந்தரமாக்கும் வரையில் தாம்…

Read More