வித்தியா படுகொலை வழக்கு – ‘விசாரணைமன்று’ அடிப்படையிலான 2ஆம் கட்ட விசாரணைகள் ஆரம்பம்!

(UDHAYAM, COLOMBO) – கூட்டுப் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட புங்குடுத்தீவைச் சேர்ந்த மாணவி வித்தியாவின் விசாரணைமன்று அடிப்படையிலான இரண்டாம் கட்ட சாட்சிப் பதிவுகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. கடந்த 28ம் திகதி ஆரம்பமான இந்த விசாரணைமன்றில் 10 சாட்சியாளர்கள் சாட்சி வழங்கியுள்ள நிலையில், மேலும் 40 பேர் சாட்சியமளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று ஆரம்பமான சாட்சிப் பதிவுகள் எதிர்வரும் 26ம் திகதி வரையில் நடைபெறும். வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையிலான இந்த…

Read More

தம்மாலோக்க தேரருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கான திகதி தீர்மானம்

(UDHAYAM, COLOMBO) – உடுவே தம்மாலோக்க தேரருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 24ஆம் திகதி, விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. அனுமதிப்பத்திரமின்றி யானை குட்டியொன்றை வைத்திருந்த குற்றச்சாட்டில், சட்டமா அதிபரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த வழக்கு, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சம்பத் விஜேரத்ன முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதன்போது, வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் திகதியை நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Read More

வித்தியாவின் படுகொலை வழக்கு, ‘விசாரணை மன்று’ அடிப்படையில் இன்று முதல்

(UDHAYAM, COLOMBO) – பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலைசெய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி வித்தியாவின் வழக்கு, ‘விசாரணை மன்று’ அடிப்படையில் இன்று முதல் யாழ்ப்பாண மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. நீதிபதி பாலேந்திரன் சசிமஹேந்திரன் தலைமையிலான மூன்று பேர் கொண்ட இந்த விசாரணை மன்றில், நீதிபதிகளாக அன்னலிங்கம் ப்ரேம்சங்கர் மற்றும் மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோரும் உள்ளடக்கப்பட்டுள்ளனர். கடந்த மே மாதம் 22ம் திகதி பிரதம நீதியரசர் பிரியசாத் டெப்பினால் இந்த விசாரணை மன்று நியமிக்கப்பட்டது. கடந்த 2015ம்…

Read More

வித்தியா படுகொலை வழக்கு..! 41 குற்றச்சாட்டுகள் முன்வைப்பு!

(UDHAYAM, COLOMBO) – புங்குடுதீவு மாணவி  வித்தியா கொலை வழக்கில் கைதாகி தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒன்பது சந்தேக நபா்களுக்கும் எதிராக 41 குற்றச்சாட்டுக்கள் சட்டமா அதிபா் திணைக்களத்தினால் நீதிமன்றத்தில் இன்று பாரப்படுத்தப்பட்டுள்ளது. புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கு மூன்று மேல் நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய ட்ரயல் அட் பார் தீர்ப்பாய முறையில் இன்று யாழ் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதற்கமைய வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன், திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம்…

Read More

ரோஹிதவிற்கு எதிரான வழக்கு அடுத்த மாதம் விசாரணைக்கு

(UDHAYAM, COLOMBO) – முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவுக்கு எதிராக கையூட்டல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழங்கு அடுத்த மாதம் 3ஆம் மற்றும் 5ஆம் திகதிகளில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. கொழும்பு நீதாவான் நீதிமன்றம் இன்று இதனை தீர்மானித்தது. இரண்டு வருட காலத்தில் 412 லட்சம் ரூபாய் பணம் மற்றும் சொத்துகள் ஈட்டியமை தொடர்பில் விபரம் தெரிவிக்காமை தொடர்பில் அவருக்கு எதிராக இந்த வழங்கு தாக்கல் செய்யப்பட்டது.

Read More