‘மரச்சின்னத்துக்கு அளிக்கும் வாக்குகள் கடலில் கொட்டப்படுவது போன்றதாகும்’ முல்லைத்தீவில் அமைச்சர் ரிஷாட்!
(UTV|MULLAITHEEVU)-பதினேழு வருடகாலமாக துன்பங்களிலும், துயரங்களிலும் பங்குபற்றாத, எந்தவிதமான அக்கறையும் கொள்ளாத மு.காவின் மரச்சின்னத்துக்கு அளிக்கப்படும் வாக்குகள், கடலில் கொட்டப்படுவது போன்றதென்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கரைதுரைப்பற்று பிரதேச சபையில் ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வேட்பாளர்களை ஆதரித்து, முல்லைத்தீவில் நேற்று மாலை (30) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர் மேலும் கூறியதாவது, முல்லைத்தீவு மாவட்டத்தில்…