கென்யாவில் இடம்பெறும் ஐ.நா.சுற்றாடல் மாநாட்டில் ஜனாதிபதி விசேட உரை

(UTV|COLOMBO) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கென்யாவின் நைரோபி நகரில், ‘சுற்றாடல் சவால்களும் நிலையான நுகர்வு மற்றும் உற்பத்திக்கான புத்தாக்கத் தீர்வுகளும்’ எனும் தொனிப்பொருளில் இடம்பெறும் ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றாடல் மாநாட்டில்  இன்றைய தினம் விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார். கென்ய நாட்டு ஜனாதிபதி உஹூரு கென்யாட்டாவின் (Uhuru Kenyatta) அழைப்பின் பேரில் ஜனாதிபதி நேற்றைய தினம் கென்யா சென்றார். மேலும் இந்த மாநாட்டில் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் உள்ளிட்ட இராஜதந்திரிகள் பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.

Read More

முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, பாராளுமன்றத்தில் விசேட உரை

(UTV|COLOMBO)-ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் நிதியமைச்சருமான  ரவி கருணாநாயக்க, பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றுவதற்காக விடுத்த கோரிக்கை சபாநாயகர் கரு ஜயசூரியவால் நிராகரிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் சபையின் நடவடிக்கைகள் நிறைவடைந்ததும், உறுப்பினர் ரவி கருணாநாயக்க  விசேட கூற்றொன்றை விடுத்து உரையாற்றினார். உரையாற்றிக்கொண்டிருந்த அவர், மத்திய வங்கியின் பிணைமுறி விவகாரம் தொடர்பிலான அறிக்கையை வாசிப்பதற்கு ஆரம்பித்தார். எனினும், அதற்கு சபாநாயகர் இடமளிக்கவில்லை. நிலையியற் கட்டளையின் பிரகாரமே, வாசிப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினர்  அனுமதி கோரியிருந்தார். அதற்கு நீண்ட…

Read More