கட்டாருக்கான இலங்கை தூதுவர், பதவியில் இருந்து விலக தீர்மானம்

(UDHAYAM, COLOMBO) – கட்டாருக்கான இலங்கை தூதுவர் பதவியில் இருந்து விலக ஏ.எஸ்.பி லியனகே தீர்மானித்துள்ளார். கொழும்பில் உள்ள அவருக்கான பீக்கொக் மாளிகையில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டார். தமக்கு தூதுவர் பதவி தேவையில்லை என்றும் அதன் காரணமாகவே இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். தமக்கு இலங்கையில் தங்கியிருக்க வேண்டிய அவசியம் காணப்படுவதாகவும் ஏ.எஸ்.பி லியனகே குறிப்பிட்டுள்ளார்.

Read More

வடமத்திய மாகாண அமைச்சு பதவிகளில் இருந்து விலக போவதாக எஸ்.எம் ரஞ்ஜித் அறிவிப்பு

(UDHAYAM, COLOMBO) – வடமத்திய மத்திய அமைச்சு பதவிகளில் இருந்து தாம் விலக தீர்மானித்துள்ளதாக எஸ் எம் ரஞ்ஜித் தெரிவித்துள்ளார். இதற்கமயை போக்குவரத்து, விளையாட்டு, கூட்டுறவு மற்றும் இளைஞர் விவகார ஆகிய அமைச்சு பதவிகளில் இருந்து விலகுவதாக தாம் தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பத்தரமுல்லையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார். மாகாண சபையில் தாம் சுயாதீனமாக இயங்குவதற்கு எதிர்பார்த்தே இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Read More