பண்டிகைக் காலத்தை முன்னிட்டு லங்கா சதொசவில் உணவுப்பொருட்களின் விலை குறைப்பு
(UTV|COLOMBO)-ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆலோசனைக்கமைய பண்டிகைக் காலத்தை முன்னிட்டு அத்தியாவசியப் பொருட்களுக்கு விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. மக்களின் நலனைக் கருத்திற்கொண்டு சதொச லொறிகள் மூலம் ஆரம்பித்துள்ள நடமாடும் விற்பனை நிலையங்களை (12) வட மாகாணத்தின் பல பிரதேசங்களில்; கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஸாட் பதியுதீன் ஆரம்பித்து வைத்தார். வவுனியாவில் இடம்பெற்ற இந்நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் றிஸாட் பதியுதீன் இவ்வாறு குறிப்பிட்டார். தற்போது 65 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் வௌ்ளைப் பச்சையரிசியை 62 ரூபாய்க்கும் 74…